10ம் வகுப்பு பொதுத் தேர்வில் இந்த மாணவர்களுக்கு புதிய கட்டுப்பாடு., அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு!!

0
10ம் வகுப்பு பொதுத் தேர்வில் இந்த மாணவர்களுக்கு புதிய கட்டுப்பாடு., அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு!!
10ம் வகுப்பு பொதுத் தேர்வில் இந்த மாணவர்களுக்கு புதிய கட்டுப்பாடு., அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு!!

10ம் வகுப்பு தேர்வில், சிறுபான்மையின மொழிவாரி மாணவர்களுக்கு தமிழ் மொழித் தேர்வு கட்டாயம் என்ற உத்தரவிலிருந்து, இந்த ஓராண்டு விலக்களிக்கப் படுவதாக உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உச்சநீதிமன்றம் உத்தரவு :

தமிழகத்தில் 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அடுத்த மாதம் முதல் பொது தேர்வு தொடங்க உள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அட்டவணை, நேற்று கல்வித்துறையால் வெளியிடப்பட்டது. அந்த வகையில் கடந்த 2006 ஆம் ஆண்டு, மாணவர்களுக்கு தமிழ் கட்டாயம் என்ற சட்டத்தை அரசு கொண்டு வந்தது. இதனால் பிற மொழி பயிலும் பள்ளி மாணவர்களும், தமிழ் தேர்வை எழுத வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

அரசின் இந்த உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு மொழிவாரி சிறுபான்மையினர் சங்கம், உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. மாணவர்களின், சூழ்நிலையை கருத்தில் கொண்டு அரசு இதற்கு நிரந்தர விலக்களிக்க வேண்டும் என வாதிடப்பட்டது.

Telegram பயனர்களுக்கு ஜாக்பாட்., அதிரடியாக களமிறங்கும் 7 புத்தம் புது அப்டேட்டுகள்! என்னென்ன தெரியுமா?

இதை எதிர்த்து வாதிட்ட அரசு தரப்பு, மனுதாரர் குறிப்பிடும் 863 மாணவர்களுக்கு மட்டுமே இதிலிருந்து விலக்கு அளிக்க முடியும் என மறு வாதம் செய்தது. இது குறித்த உத்தரவை பிறப்பித்த நீதிபதிகள், இந்த ஆண்டு மட்டும் மொழிவாரி சிறுபான்மையின மாணவர்களுக்கு 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழ் தேர்வு எழுத விலக்களிக்கப் படுவதாக உத்தரவிட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here