ஜாம்பவானின் சாதனையை முறியடிப்பாரா விராட் கோலி?? ஆஸி,தொடரில் வாய்ப்பு கிட்டுமா!!!

0
ஜாம்பவானின் சாதனையை முறியடிப்பாரா விராட் கோலி?? ஆஸி,தொடரில் வாய்ப்பு கிட்டுமா!!!
ஜாம்பவானின் சாதனையை முறியடிப்பாரா விராட் கோலி?? ஆஸி,தொடரில் வாய்ப்பு கிட்டுமா!!!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி சச்சினின் சாதனையை முறியடிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விராட் கோலி

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான பார்டர் கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடர் வரும் 9 ஆம் தேதி தொடங்க உள்ளது. இந்த தொடரின் முதல் போட்டி நாக்பூரில் உள்ள விதர்பா மைதானத்தில் அரங்கேற உள்ளது. டெஸ்ட் தொடரில் ஜடேஜா, ராகுல் போன்ற ஓய்வில் உள்ள வீரர்கள் அணிக்கு திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இந்நிலையில் இந்த தொடரில் இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரர் விராட் கோலி முன்னாள் வீரர் சச்சினின் சாதனையை முறியடிப்பார் என்று தான் தெரிகிறது. அதாவது சச்சின் புகழ்பெற்ற பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரில் அதிக சதங்களை அடித்தவர் பட்டியலில் 9 சதங்கள் அடித்து முதலிடத்தில் உள்ளார். இவரை தொடர்ந்து விராட் கோலி 7 சதங்களுடன் 2 ஆம் இடத்தில் இருக்கிறார்.

IND VS AUS TEST.., இந்தியாவை வீழ்த்த திட்டம் போட்ட ஆஸ்திரேலியா.., ஓ இது தான் உங்க பிளான் ஆ!!!

இதனால் வரவிருக்கும் பார்டர் கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் விராட் கோலி 3 சதங்கள் அடித்தால் எளிதாக சச்சினின் சாதனையை முறியடிக்க அதிக வாய்ப்புள்ளதாக தெரிகிறது. எனவே இந்த போட்டியில் விராட் கோலி சதமடித்து முதலிடம் பிடிப்பாரா என பொறுத்திருந்து பார்க்கலாம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here