வெற்றிநடை போடும் விடுதலை திரைப்படம்..,வெற்றிமாறனை தூக்கிவச்சு பேசிய பிரபல அரசியல்வாதி!!

0
வெற்றிநடை போடும் விடுதலை திரைப்படம்..,வெற்றிமாறனை தூக்கிவச்சு பேசிய பிரபல அரசியல்வாதி!!
வெற்றிநடை போடும் விடுதலை திரைப்படம்..,வெற்றிமாறனை தூக்கிவச்சு பேசிய பிரபல அரசியல்வாதி!!

சமீபத்தில் வெளியான விடுதலை படத்தை குறித்து விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல். திருமாவளவன் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

விடுதலை திரைப்படம்:

தென்னிந்திய தமிழ் சினிமாவில் ரசிகர்களின் பேவரைட் இயக்குனராக விளங்கி வருபவர் தான் இயக்குநர் வெற்றிமாறன். தற்போது இவர் இயக்கிய விடுதலை படம் ரிலீசாகி வெற்றி நடை போட்டு வருகிறது. இப்படத்தில் ஹீரோவாக அறிமுகமாக காமெடி நடிகர் சூரி பலத்த வரவேற்பை பெற்று வருகிறார். பல சினிமா பிரபலங்கள் அந்த படக்குழுவினருக்கு வாழ்த்து மழையை பொழிந்து வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அந்த வகையில் சமீபத்தில் வெளியான விடுதலை படத்தை குறித்து விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல். திருமாவளவன் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது அவர் கூறியிருப்பதாவது, நண்பர் வெற்றிமாறன் இயக்கிய விடுதலை திரைப்படம் பார்த்தேன். அப்படத்தில் அரசு -அதிகாரம் -ஆட்சி நிர்வாகம் போன்றவற்றிக்கு உழைக்கும் மக்களுக்கு இடையிலான முரண்களை தெளிவாக விவரிக்கிறது.

சென்னை மெட்ரோ குறித்து வெளியான அல்டிமேட் நியூஸ்.., இவளோ விஷயம் நடந்திருக்கா??

குறிப்பாக அரசு என்றால் அதிகாரம், அதிகாரம் என்றால் ஆயுதம், ஆயுதம் என்றால் ஆணவம்; ஆணவம் என்றால் ஏழை எளிய மக்களின் வயிற்றில் அடிக்கும் ஒரு ஒழுங்கற்ற செயல் என்பதை அழகாக சுட்டி காட்டியுள்ளார். மேலும் வெற்றி மாறன் அவர்கள் ஒரு இயக்குனராக மட்டுமின்றி வர்க்க முரண்களை விவரிக்கும் ஒரு பேராசிரியராகவும் இப்படத்தில் திகழ்ந்துள்ளார். வழக்கம் போல இது வெற்றிமாறன் படைப்பு என முத்திரை பதித்துள்ளார். விடுதலை படம் வெற்றியடைய வாழ்த்துக்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here