மீண்டும் சுவைக்க தூண்டும் சைவ நெத்திலி மீன் குழம்பு.., இந்த சண்டே உங்க வீட்ல ட்ரை பண்ணி பாருங்க! அம்புட்டு ருசியா இருக்கும்!!

0
மீண்டும் சுவைக்க தூண்டும் சைவ நெத்திலி மீன் குழம்பு.., இந்த சண்டே உங்க வீட்ல ட்ரை பண்ணி பாருங்க! அம்புட்டு ருசியா இருக்கும்!!
மீண்டும் சுவைக்க தூண்டும் சைவ நெத்திலி மீன் குழம்பு.., இந்த சண்டே உங்க வீட்ல ட்ரை பண்ணி பாருங்க! அம்புட்டு ருசியா இருக்கும்!!

அசைவ உணவுகளை சாப்பிட்டு அதன் சுவை நம் பலருக்கு மிகவும் விருப்பமான தாகி விட்டது. இதனால் நாம் சாப்பிடும் சைவ உணவுகளில் கூட அசைவ உணவுகளின் மனம் சுவை இருக்க வேண்டும் என நினைப்போம். அந்த வகையில் நம் உடலுக்கு மிகுந்த ஆரோக்கியத்தை தரக்கூடிய வாழை பூவை வைத்து, நெத்திலி மீன் குழம்பு சுவையில் சமைப்பது எப்படி என்று பார்க்கலாம் வாங்க.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

தேவையான பொருட்கள்;

வாழை பூ – 1

மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்

மல்லி தூள் – 2 டீஸ்பூன்

எண்ணெய் – 3 டீஸ்பூன்

கடுகு – சிறிதளவு

தேங்காய் – 5 கிராம்

சீரகம் – 1 டீஸ்பூன்

மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்

புளிக்கரைசல் – 1 கப்

வெந்தயம் – 1/2 டீஸ்பூன்

சின்ன வெங்காயம் – 50 கிராம்

வெள்ளை பூண்டு – 5 பல்

தக்காளி – 3

கொத்தமல்லி இலைகள் – சிறிதளவு

உப்பு – தேவையான அளவு

செய்முறை விளக்கம்;

இந்த சைவ நெத்திலி மீன் குழம்பு செய்வதற்கு முதலில் நாம் எடுத்து வைத்துள்ள வாழைப்பூவை சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும்.மேலும் மிக்ஸி ஜாரில் தேங்காய், சீரகம் சேர்த்து அரைத்து வைத்துக் கொள்ளவும். அதன் பிறகு ஒரு காடாய் எடுத்து அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு, வெந்தயம், கறிவேப்பிலை போட்டு தாளித்து கொள்ளவும். இதோடு நாம் நறுக்கி வைத்துள்ள சின்ன வெங்காயம், தக்காளி போட்டு, அதோடு மஞ்சள் தூள், மல்லி தூள், மிளகாய் தூள் போட்டு நன்றாக வதக்கி கொள்ளவும்.

வெற்றிநடை போடும் விடுதலை திரைப்படம்..,வெற்றிமாறன் தூக்கிவச்சு பேசிய பிரபல அரசியல்வாதி!!

இப்போது இதில் புளிக்கரைசல் மற்றும் தேங்காய் பேஸ்ட் சேர்த்து நற்றாய் கிளறி விட்டு கொள்ளவும். இதோடு நாம் சுத்தம் செய்து வைத்துள்ள வாழை பூவை இதில் சேர்த்து தேவையான அளவு உப்பு போட்டு காடாயை மூடி வைக்கவும். இதன் பிறகு ஒரு 20 நிமிடம் கழித்து குழம்பில் கொத்தமல்லி இலைகள் சேர்த்து அடுப்பை ஆப் செய்யவும். இப்போது நமக்கு சுவையான ”சைவ நெத்திலி மீன் குழம்பு” தயார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here