தேனாண்டாள் நிறுவனத்தின் பெயரை பயன்படுத்தி மர்ம நபர்கள் மோசடி – நிறுவனர் வெளியிட்ட நோட்டீஸ்!!

0

தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் சங்கமித்ரா என்னும் திரைப்படத்தை தயாரிக்க இருந்தது. ஆனால் அந்த முயற்சியை பின்னர் கைவிட்ட பின்னரும் மோசடி நபர்கள் இந்த திரைப்படத்தை தயாரித்து வருவதாக கூறி பணம் பறித்து வருகின்றனர்.

தேனாண்டாள் நிறுவனம்:

தமிழ் திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனமாக திகழ்ந்து வரும் தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் குட்டி பிசாசு, தில்லுக்கு துட்டு, கண்ணா லட்டு தின்ன ஆசையா, ஆறாது சினம், பொதுவாக எம் மனசு தங்கம், மெர்சல் மற்றும் பல வெற்றி திரைப்படங்களை கொடுத்துள்ளது. இந்த நிறுவனம் சுந்தர் சி இயக்கத்தில் ”சங்கமித்ரா” என்னும் புதிய திரைப்படத்தை தயாரிக்க ஒப்பந்தமானது. அதற்கு பிறகு இந்த முடிவை சுந்தர் சி கைவிட்டுவிட்டார்.

ஆனால் தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தற்போது சங்கமித்ரா திரைப்படத்தை தயாரித்து வருவதாக சில நபர்கள் மோசடி செய்து வருகின்றனர். தற்போது தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் நாங்கள் சங்கமித்ரா திரைப்படத்தை தயாரிக்கவில்லை என்பதை தெளிவுபடுத்தியுள்ளனர். இது போன்ற மோசடி நபர்களை நம்பி ஏமாற வேண்டாம். இந்த சட்டவிரோத செயலால் ஏற்படும் இழப்புக்கு நாங்கள் பொறுப்பல்ல என தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here