பப்ஜி விளையாட கூடாது என கண்டித்ததால் இளைஞன் தற்கொலை – வாணியம்பாடியில் நடந்த கோரசம்பவம்!!

0
suicide
suicide

இந்தியாவில் பப்ஜி விளையாட்டுக்கு தடை செய்து மத்திய அரசு உத்தரவிட்ட நிலையில் பப்ஜி விளையாட கூடாது என தந்தை கண்டித்ததால் மகன் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

பப்ஜி

பப்ஜி விளையாட்டை இந்தியாவில் 20 லட்சத்திற்கு மேற்பட்டோர் விளையாண்டு வருகின்றனர். இந்த பப்ஜி விளையாட்டு பிரியர்கள் இந்தியாவில் அதிகம் உள்ளனர். சிலர் இதற்கு அடிமையாகியுள்ளனர். எனவே பொது நலன் கருதி மத்திய அமைச்சகம் பப்ஜி விளையாட்டை தடை செய்தது. வாணியம்பாடி அருகே உள்ள ஆலங்குடி அடுத்து உள்ள கோமுட்டேரி என்ற பகுதியில் வசித்து வருபவர் பெருமாள். இவர் அங்கு வெல்டிங் தொழில் நடத்தி வருகிறார்.

pubg
pubg

இவரின் கடைசி மகன் சீனி வாசன். இவர் ஆலங்குடியில் உள்ள அரசு பள்ளியில் தற்போது 12 ஆம் வகுப்பு முடித்துள்ளார். கொரோனா காரணமாக வீட்டில் இருந்த சீனிவாசன் பப்ஜி விளையாண்டுள்ளார். தற்போது பப்ஜி தடை செய்யப்பட்டதை அடுத்து இன்னும் கூகுளை பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்படவில்லை. அதனால் பப்ஜி விளையாடிய மகனை பெருமாள் கண்டித்துள்ளார். அரசாங்கமே தடை செய்துள்ளது, இனிமேல் இதை விளையாட கூடாது என மொபைலை பறித்துளார். இதனால் கவலையான சீனிவாசன் தனது அறைக்கு சென்று தூக்கு மாட்டி இறந்துள்ளார்.

seenivasan
seenivasan

இறந்த தன் மகனை அடக்கம் செய்ய பெருமாள் ஏற்பாடுகள் செய்துள்ளார். ஆனால் அப்பகுதியில் உள்ள மக்கள் ஆலங்குடி காவல் நிலையத்தில் இது பற்றி புகார் அளித்துள்ளனர். இதனால் காவல் துறையினர் விரைந்து வந்து சடலத்தை வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு கொண்டு சென்றுள்ளனர். மேலும் இது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here