கோவில்களில் சானிட்டைசர் பயன்படுத்த கூடாது – வினோத காரணம் சொல்லும் பூசாரி..!

0
கோவில்களில் சானிட்டைசர் பயன்படுத்த கூடாது - வினோத காரணம் சொல்லும் பூசாரி..!
கோவில்களில் சானிட்டைசர் பயன்படுத்த கூடாது - வினோத காரணம் சொல்லும் பூசாரி..!

கொரோனாவால் நாடெங்கிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தற்போது ஜூன் 30 வரை நீடிக்கப்பட்டிருந்தது. ஜூன் 8 முதல் கோவில்கள் திறக்கப்படும் என அரசு அறிவித்திருந்தது. அதனை தொடர்ந்து மத்திய அரசு சொன்னபடி சானிட்டைசரை கோயில்களில் அனுமதிக்க மாட்டோம் என மத்தியப்பிரதேச மாநிலத்தை சேர்ந்த பூசாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஊரடங்கு

சீனாவில் இருந்து பரவிய கொரோனா தற்போது நாடெங்கிலும் பரவி வருகிறது. மேலும் மார்ச் 24 முதல் பொது முடக்கம் அறிவிக்கப்பட்ட நிலையில் கோவில்கள், பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. மேலும் கோவில்களில் நடத்தப்பட்ட பூஜைகளிலும் பக்தர்கள் கலந்து கொள்ள தடை விதித்திருந்தது.

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

5 ஆம் கட்ட ஊரடங்கில் சில தளர்வுகளை அரசு விதித்திருந்தது. அதில் கோவில்களுக்கு வருபவர்கள் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் எனவும், முகக்கவசம், சானிட்டைசர் பயன்படுத்துவது கட்டாயம் என அரசு சில நிபந்தனைகளை விதித்திருந்தது.

சானிட்டைசர்

இந்நிலையில் மத்தியப்பிரதேச மாநிலம் போபாலில் உள்ள பிரபல கோயிலான மா வைஷ்னவதம் நவ் துர்கா கோயிலை சேர்ந்த பூசாரி சந்திரசேகர் திவாரி, “மத்திய அரசு கூறியுள்ளபடி கோயில்களில் சானிட்டைசர்களை அனுமதிக்க முடியாது. அதில் ஆல்கஹால் உள்ளது” என்று கூறி அதிர்ச்சியடைய செய்துள்ளார்.

முதல்வர் காப்பீடு திட்டத்தின் கீழ் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை – முதல்வர் எடப்பாடி அறிவிப்பு..!

கோயில்களுக்கு மது அருந்தி விட்டு செல்லாத நிலையில், எப்படி ஆல்கஹால் இருக்கும் சானிட்டைசர்களை அனுமதிக்க முடியும் எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் கோயில்களுக்கு வெளியே சானிட்டைசர்கள், சோப்புகளை வைத்து கொள்ளலாம் எனவும் அவர் யோசனை தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here