உலக கோப்பை நாயகனுக்கு இன்று பிறந்த நாள்…, வாழ்த்து மழையில் கேன் வில்லியம்சன்!!

0
உலக கோப்பை நாயகனுக்கு இன்று பிறந்த நாள்..., வாழ்த்து மழையில் கேன் வில்லியம்சன்!!
உலக கோப்பை நாயகனுக்கு இன்று பிறந்த நாள்..., வாழ்த்து மழையில் கேன் வில்லியம்சன்!!

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் சார்பாக, ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் என மூன்று வடிவிலும் உலக கோப்பை தொடர்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதில், டெஸ்ட் தொடரானது சுழற்சி முறையில் குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. 2019 முதல் 2021 ஆம் ஆண்டு வரை நடைபெற இதன் முதல் சீசனை வென்ற பெருமை நியூசிலாந்து அணியே சாரும்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இதற்கு முக்கிய காரணம், நியூசிலாந்து அணியின் கேப்டனான கேன் வில்லியம்சன் ஆவார். இவர், உலகக் கோப்பை போட்டியின் சிறந்த வீரர், டெஸ்டில் நியூசிலாந்துக்காக அதிக ரன்கள் எடுத்தவர், ஒருநாள் போட்டியில் 6555 ரன்கள், ஐபிஎல் 2018 இல் ஆரஞ்சு தொப்பி வென்றவர், சர்வதேச அளவில் 17,000 ரன்களை கடந்தவர் என பல பெருமைகளுக்கு சொந்தக்காரர் ஆவார். இவர் இன்று (ஆகஸ்ட் 8) தனது 33 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இவருக்கு சர்வதேச வீரர்கள் மற்றும் ரசிகர்கள் என பல தரப்பில் இருந்து வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.

தொடர் வெற்றிகளை குவிக்கும் இந்தியா…, ஆசிய சாம்பியன்ஷிப்பில் அரையிறுதிக்கு முன்னேற்றம்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here