தொடர் வெற்றிகளை குவிக்கும் இந்தியா…, ஆசிய சாம்பியன்ஷிப்பில் அரையிறுதிக்கு முன்னேற்றம்!!

0
தொடர் வெற்றிகளை குவிக்கும் இந்தியா..., ஆசிய சாம்பியன்ஷிப்பில் அரையிறுதிக்கு முன்னேற்றம்!!
தொடர் வெற்றிகளை குவிக்கும் இந்தியா..., ஆசிய சாம்பியன்ஷிப்பில் அரையிறுதிக்கு முன்னேற்றம்!!

ஆசிய சாம்பியன்ஷிப் ஹாக்கி தொடரின் 7 வது சீசன் சென்னையில் இந்தியா, பாகிஸ்தான், மலேசியா உள்ளிட்ட ஆறு அணிகளுக்கு இடையே விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில், ஒவ்வொரு அணி மற்ற அணிகளுக்கு எதிராக தலா ஒரு முறை மோதி வருகின்றனர். இந்த வகையில், இந்திய அணியானது நேற்று தென் கொரியா அணியை எதிர்த்து நேற்று போட்டியிட்டது. இந்த போட்டியில், இந்தியாவின் நீலகண்ட, ஹர்மன்பிரீத் சிங் மற்றும் மந்தீப் சிங் ஆகியோர் 6வது, 23 வது மற்றும் 33 வது நிமிடங்களில் தலா ஒரு கோல் அடித்து அசத்தினார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

இதற்கிடையில், தென் கொரியாவின் கிம் சுங்-ஹியூன் 12 வது நிமிடத்திலும், யாங் ஜி-ஹன் 58 வது நிமிடத்திலும் கோல் அடித்தனர். இதன் பின், தென் கொரிய வீரர்கள் கோல் அடிக்க பல முறை முயற்சித்த போதும் தோல்வியிலேயே முடிந்தது. இதனால் இந்திய அணி 3-2 என்ற கோல் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றதுடன் புள்ளிப் பட்டியலில் முதலிடம் பிடித்து அசத்தி உள்ளது. இதனால், அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பையும் இந்திய அணி பிரகாசமாகி கொண்டது. நாளை இந்திய அணி தனது கடைசி லீக் போட்டியில் பாகிஸ்தான் அணியை எதிர்கொள்ள இருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here