கொரோனா வைரஸ் உருமாற்றம் பெற்றுள்ளதா..? பீலா ராஜேஷ் விளக்கம்..!

0
beela rajesh
beela rajesh

கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இந்தியாவில் இந்த தோற்று தீவிரமடைந்து வருகிறது. இதனை தொடர்ந்து கொரோனா வைரஸ் உருமாற்றம் பெற்றுள்ளதா? என்பது குறித்து சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் இன்று விளக்கம் அளித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தாக்கம்

தமிழகத்தில் இதுவரை பரவி வந்த வீரியமில்லாத கொரோனா வைரஸின் தாக்கம் குறைந்து, வீரியம் அதிகமுள்ள ‘க்ளேட் A3i’ ஆக உருமாறி பரவி வருகிறது என்கிற தகவல் மக்களிடையே பரவி வருகிறது. மேலும் இது அனைவரையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

corona vvirus cases
corona vvirus cases

மகாராஷ்டிர மாநிலத்திலிருந்து இந்த வகை வைரஸ் தமிழகத்துக்கு வந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. அதன் காரணமாகத் தீவிர பாதிப்புகள் அதிகரித்து, உயிரிழப்புகளும் அதிகரிக்கலாம் என்று கூறப்பட்டு வருகிறது.

பீலா ராஜேஷ்

இதனை தொடர்ந்து சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் கூறியதாவது, “கொரோனா வைரஸ் உருமாற்றம் பெற்றுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் இல்லை” என்று கூறியுள்ளார்.

beela rajesh
beela rajesh

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆராய மருத்துவக்கல்வி இயக்குனரகம், பொது சுகாதாரத்துறை, மாநகராட்சி அதிகாரி அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. இதுவரை உயிரிழந்தவர்கள் எதனால் உயிரிழந்தார்கள் என்பதை இந்த குழு ஆராயும். கொரோனா இறப்பு விகிதம், எண்ணிக்கை குறித்து அரசு வெளிப்படையாக தகவல்களை வெளியிட்டு வருகிறது.

முககவசத்தால் ஏற்படும் சரும பிரச்னைகள் – சமாளிப்பது எப்படி..?

மேலும் தேவைக்கேற்ப சென்னைக்கு அதிக அளவில் மருத்துவர்கள், சுகாதாரத்துறை பணியாளர்கள் நியமிக்கப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கொரோனா சிகிச்சைக்கான படுக்கைகள் எண்ணிக்கையை 10,000 ஆக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறினார்.

coona ward
coona ward

கொரோனா சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைகளில் 5,000 படுக்கை வசதிகள் தயார் நிலையில் உள்ளன என தெரிவித்தார். இதையடுத்து மேலும் 5,000 படுக்கை வசதிகளை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தனியார் மருத்துவமனைகளிலும் கொரோனா சிகிச்சைக்காக பிரத்தியேக படுக்கைகள் ஏற்பாடு செய்ய ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது என்று அவர் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here