அயோத்தியில் எழுப்ப இருக்கும் புதிய மசூதி., கட்டுமான பணி குறித்து வெளியான முக்கிய அப்டேட்!!

0
அயோத்தியில் எழுப்ப இருக்கும் புதிய மசூதி., கட்டுமான பணி குறித்து வெளியான முக்கிய அப்டேட்!!
உத்தரப்பிரதேசம் அயோத்தியில் இருந்த பாபர் மசூதி 1992 ஆம் ஆண்டு டிசம்பரில் இடிக்கப்பட்டது. மேலும் பாபர் மசூதி இருக்கும் இடத்தில் முதலில் ராமர் கோயில் தான் இருந்தது என நீதிமன்றத்தில் வழக்கு தொடங்கப்பட்டது.    பல வருடங்களாக நிலுவையில் இருந்த வழக்கு  கடந்த 2019 ஆம் ஆண்டு இதற்கு தீர்ப்பு வழங்கப்பட்டது. அதன்படி பாபர் மசூதி இடித்த இடத்தில் ராமர் கோயில் கட்ட அனுமதி வழங்கி உச்ச நீதிமன்ற நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.
இதைத்தொடர்ந்து அயோத்தியில் மிகப்பிரம்மாண்டமாக ராமர் கோவில் எழுப்பப்பட்டு ஜனவரி 22ஆம் தேதி அதன் கும்பாபிஷேகம் கோலாகமாக நடந்து முடிந்தது. இந்நிலையில் இடிக்கப்பட்ட மசூதிக்கு பதிலாக வேறு மசூதி கட்டுவதற்கான கட்டுமான பணி தொடங்குவது குறித்து, அயோத்தி மசூதி மேம்பாட்டு கமிட்டி ஒரு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.  அதாவது அயோத்தியில் இருந்து சுமார் 25 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள தன்னிபூர் என்ற கிராமத்தில் புதிய மசூதி எழுப்பட உள்ளதாம். இதன் கட்டுமான பணி ரமலான் மாதத்திற்குப் பிறகு மே மாதத்தில் இருந்து தொடங்கப்படும் என தெரிவித்துள்ளார் மேலும் மசூதி கட்டி முடிப்பதற்கு மூன்று முதல் நான்கு ஆண்டுகள் வரை ஆகும் என தெரிவித்துள்ளார். 

Enewz Tamil WhatsApp Channel 

ரேஷன் கடை தேர்வு முடிவுகள்.., இன்று வெளியீடு.., முழு விவரம் இதோ!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here