”இன்னுயிர் காப்போம் நம்மை காக்கும் 48”., இலவச சிகிச்சை தொகை உயர்வு., அமைச்சர் அதிரடி அறிவிப்பு!! 

0
தமிழக மக்களின் நலனுக்காக பல்வேறு நலத்திட்டங்களை முதல்வர் அறிவித்து வருகிறார். அந்த வகையில் கடந்த 2022 ஆம் ஆண்டு ”இன்னுயிர் காப்போம் நம்மை காக்கும் 48 என்ற திட்டத்தை தொடங்கி வைத்திருந்தார். அதன்படி விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் இலவச சிகிச்சை அளிக்கப்படும்.  மேலும் விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முதல் 48 மணி நேரத்திற்கு இத்திட்டத்தின் மூலம் இலவச சிகிச்சை அளிக்கப்படும்.
இவ்வாறு விபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் உயிரை உரிய நேரத்தில் காப்பாற்றுவதற்காக முதல்வர் அறிவித்த திட்டம் கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைமுறையில் இருந்து வருகிறது. இந்நிலையில் இது குறித்து இன்று நடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் அமைச்சர் தங்கம் தென்னரசு ஒரு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது இன்னுயிர் காப்போம் நம்மை காக்கும் 48 என்ற திட்டத்தின் கீழ் விபத்து நடந்த முதல் 48 மணி நேரத்தில் வழங்கப்படும் இலவச சிகிச்சைக்கான உச்ச வரம்பு தொகை ஒரு லட்சத்திலிருந்து 2 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளதாம்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here