தனது தங்கையுடன் இருக்கும் தளபதி விஜய் – வைரலாகும் அரிய புகைப்படம்!!

0

தமிழ் சினிமாவில் வசூல் வேட்டையை நடத்தி வருபவர் தான் தளபதி விஜய். தற்போது இவர் தனது தங்கையுடன் இருக்கும் அரிய புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

தளபதி விஜய்:

கோலிவுட் சினிமாவில் வசூல் மான்ஸ்டராக திகழ்ந்து வருபவர் தான் தளபதி விஜய். இவரது படம் வருடத்திற்கு ஒன்று மட்டும் வெளி வந்தாலும் அந்த ஒரு படத்தை காண்பதற்கு ரசிகர்கள் தவமிருந்து காத்து வருவார்கள். இவரது படம் வெளியானதும் தியேட்டர்களில் பெரும் திருவிழாவை போல் ரசிகர்கள் கொண்டாடி வருவார்கள். அந்த அளவிற்க்கு விஜய்க்கு ரசிகர்கள் மத்தியில் அதிக மாஸ் இருந்து வருகிறது.

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

தற்போது தளபதி விஜய் நெல்சன் திலீப்குமார் இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்து வருகிறது. தற்போது தமிழகத்தில் நிலவும் கொரோனா சூழல் காரணமாக தளபதி விஜய் படப்பிடிப்பை நிறுத்திக்கொள்ளுமாறு படக்குழுவிடம் தெரிவித்துள்ளாராம். இதன் காரணமாக தற்போது படப்பிடிப்பு நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

விஜய் டிவி மா கா பா வின் அழகிய குடும்பம் – வைரலாகும் புகைப்படம்!!

இந்நிலையில் தற்போது தளபதி விஜயின் யாரும் பார்த்திடாத புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி விஜய் மறைந்த தனது தங்கையுடன் இருக்கும் அரிய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தில் விஐய் தனது தங்கையின் படத்திற்கு விளக்கேற்றி வழிபடுவது போல் இருப்பதால் இது ரசிகர்களை சற்று கண்கலங்க வைத்தும் வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here