இந்திய விமானப்படைக்கு சொந்தமான போர் விமானம் விழுந்து நொறுங்கியது !!!

0

இந்தியா விமானப்படைக்கு சொந்தமான மிக்-21 ரக போர் விமானம் சோதனையின் போது விழுந்து நொறுங்கியது. வழக்கமான பயிற்சியின் போது போர்விமானம் விழுந்து நொறுங்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்த வருடத்தில் இது மூன்றாவது விபத்து ஆகும்.

போர் விமானம் விழுந்து நொறுங்கியது:

இந்திய விமானப்படைக்கு சொந்தமான மிக்21 ரக போர் விமானம் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. அதிகாலை 1 மணியளவில் பஞ்சாப் மாநிலம் மோகா அருகே தனது வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டிருந்தது. சோதனையின்போது கட்டுப்பாட்டை இழந்த போர் விமானம் தரையில் விழுந்து விபத்துக்குள்ளானது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்த விபத்து தொடர்பாக உரிய விசாரணைக்கும் விமானப்படை உத்தரவிட்டுள்ளது. இதில் அதிர்ஷ்டவசமாக விமானத்தில் இருந்த விமானி பாராசூட் மூலம் குதித்து உயிர் தப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த வருடத்தில் மட்டும் மிக் -21 போர் விமானங்கள் சந்தித்த மூன்றாவது விபத்து ஆகும். இந்த விபத்து தொடர்பாக உரிய விசாசரணைக்கும் விமானப்படை உத்தரவிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here