கொரோனா பரிசோதனை கட்டணம் அதிகமாக கேட்டால் புகார் அளிக்கலாம் – தமிழக அரசு அதிரடி !!!

0

தமிழகத்தில் கொரோனா தொற்று பரிசோதனைக்காக கட்டணம் அதிகமாக வசூலித்தால் புகார் கொடுக்கலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

கட்டணம் அதிகமாக கேட்டால்:

தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருவதால் பல்வேறு கட்டுப்பாட்டுகளுடன் தடுப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மக்கள் கொரோனா பரிசோதனை செய்வதற்காக அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு செல்கின்றனர்.

அரசு மருத்துவமனை மற்றும் முகாம்களில் இலவசமாக ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்யப்படுகிறது. அதன்படி, தனியார் ஆய்வு கூடங்களில் ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்ய ரூ.900 கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதில் முதல்வரின் மருத்துவ காப்பீடு திட்ட பயனாளிகளுக்கு ரூ.550 கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து தனியார் ஆய்வகங்கள் கொரோனா பரிசோதனை செய்ய கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்துள்ளது. இதனை சரி செய்யும் வகையில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் 18004253993 மற்றும் கோவிட் கட்டளை மையத்தை (104 ) தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Instagram  => Follow செய்ய கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here