அட இங்கேயுமா?? கிரிக்கெட் வீரர்களையே திரும்பி பார்க்க வைத்த தல ரசிகர்கள்!!!

0

தல அஜித் நடிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் தான் வலிமை. பல நாட்களாகவே தல ரசிகர்கள் வலிமை அப்டேட் குறித்து கேட்டு வருகின்றனர். தற்போது இந்தியா – நியூஸிலாந்து இடையே நடக்கும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியிலும் ரசிகர்கள் வலிமை அப்டேட் பதாகைகளை தூக்கிக்காட்டினர். இந்த புகைப்படம் இணையத்தில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.

தமிழ்நாட்டில் அதிக ரசிகர் பட்டாளம் உள்ள நடிகர்களில் தல அஜித்தும் ஒருவர். இவரது ஒவ்வொரு படம் வெளியாகும் போதும் அவர் ரசிகர்கள் அதை திருவிழா போல கொண்டாடுவார்கள். இப்போது அஜித் நடித்துள்ள படம் வலிமை. ஏற்கனவே அஜித் அவர்களின் பிறந்த நாளான மே 1 ஆம் தேதி பஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

ஆனால் கொரோனா இரண்டாவது அலை காரணமாக  பஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகாது, என அப்படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் அறிவித்தார். இது ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றமாக அமைந்தது. இருந்தாலும் ரசிகர்கள் எங்கெல்லாம் முடியுமோ அங்கெல்லாம் வலிமை அப்டேட் குறித்து கேட்டு வருகின்றனர்.

தற்போது இதெற்கெல்லாம் மேலே ஒரு படி சென்று, இங்கிலாந்தில் நடைபெறும் இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கிடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் வலிமை அப்டேட் பதாகைகளை தூக்கி காட்டி  ‘வலிமை’ அப்டேட்’ என கேட்டுள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here