உங்கள விட உங்க பொண்ணுக்கு தான் பேன்ஸ் அதிகம் போல.. அம்மாவும் பொண்ணும் சேர்த்து அடிக்கிற லூட்டிய நீங்களே பாருங்க!!!

0

விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா-ராணி  சீரியலில் நடித்தவர்கள் தான் சஞ்சீவ் – ஆல்யா மானசா. இவர்களுக்கு 2020-ம் ஆண்டு  ஐலா சையத் என்ற அழகிய பெண் குழந்தை பிறந்தது. இந்த குழந்தையும் ஆல்யா மானசாவும் சேர்ந்து செய்யும் சேட்டைகள் அனைவராலும் ரசிக்கப்படுகின்ற ஒன்று. அந்த வகையில் தற்போது அவர்கள் வெளியிட்ட வீடியோ ஒன்றும் அமைந்துள்ளது. தற்போது அது டிரெண்டிங் ஆகிவருகிறது.

சின்னத்திரையில் கார்த்திக் – செம்பா என ரீல் ஜோடிகளாக வலம் வந்தவர்கள் தான் இந்த சஞ்சீவ் – ஆல்யா மானசா. பின்னர் காதல் வயப்பட்டு காதல் திருமணம் செய்து கொண்டு ரியல் ஜோடிகளாக மாறினார்கள்.  இவர்களுக்கு ஐலா சையத் என்ற ஒரு வயதுடைய ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்த குழந்தை அப்படியே அவளின் அம்மாவான ஆல்யா மானசாவை உரித்து வைத்து உள்ளது. அதாவது இந்த குட்டியின் உருவத்தில் தொடங்கி செய்யும் சேட்டைகள் உட்பட அனைத்தும் அவரின் தாயார் போலவே அமைந்து இருக்கும்.

இந்நிலையில் ஆல்யா மானசா தனது மகளுடன் செய்யும் சின்ன சின்ன குறும்புகளையும் சேட்டைகளையும் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார். அந்த வீடியோவை பார்க்கும் போது அம்மாவையே மிஞ்சுருவாங்க போல இந்த சுட்டி குட்டி என அந்த பிஞ்சின் செயல்கள் அமைந்து இருக்கும்.

தற்போது வெளியாகி உள்ள வீடியோவில், மானசா தன் குழந்தையை கையில் ஏந்திக் கொள்ள அலமாரியில் உள்ள ஆடைகளை காண்பது போலவும், ஐலா அதற்கு தன்னுடைய சொக்க வைக்கும் சிரிப்பை சிரிப்பது போலவும் மிகவும் அருமையான வீடியோவை வெளியிட்டு உள்ளார். தற்போது அந்த பிஞ்சின் சிரிப்பால் அனைவரும் மயங்கி உள்ளனர்.

 

View this post on Instagram

 

A post shared by aila_addicts (@aila_addicts)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here