கடைசி யுத்தம் இன்று தொடக்கம்.., செல்ஃபீயுடன் தனது பயணத்தை முடிக்க போகும் ரோஜர்.., !!

0
கடைசி யுத்தம் இன்று தொடக்கம்.., செல்ஃபீயுடன் தனது பயணத்தை முடிக்க போகும் ரோஜர்.., !!
கடைசி யுத்தம் இன்று தொடக்கம்.., செல்ஃபீயுடன் தனது பயணத்தை முடிக்க போகும் ரோஜர்.., !!

பிரபல டென்னிஸ் வீரர் ரோஜர் பெடரர் தனது கடைசி டென்னிஸ் போட்டியில் விளையாடி விட்டு இன்றுடன் ஓய்வு பெறுகிறார்.

ரோஜர் பெடரர்

சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் பல கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்ற சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் அண்மையில் தனது ஓய்வு முடிவை அறிவித்தார். இந்நிலையில் இன்று லண்டனில் நடைபெறும் லேவர் கோப்பை டென்னிஸ் தொடரில் பெடரர் விளையாட உள்ளார். இது அவருக்கு கடைசி போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

அதன்படி இன்றைய போட்டியில் இரட்டையர் பிரிவில் ரபேல் நடாலுடன் இணைந்து விளையாட உள்ளார். இந்த தொடருடன் ரோஜர் பெடரர் ஓய்வு பெற இருப்பதால், ரசிகர்கள் மத்தியில் இந்த தொடர் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

T20 வேர்ல்ட் கப்.., முதல் தகுதி சுற்று ஆட்டம்.., இன்று தொடக்கம்.., வெற்றி யாருக்கு??

இந்நிலையில் தனது இறுதிப் போட்டிக்கு முன்பாக சக வீரர்களுடன் எடுத்துக் கொண்ட செல்ஃபி அவரது ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது. மேலும் பெடரர் ஆஸ்திரேலியா, பிரெஞ்சு, விம்பிள்டன், அமெரிக்க ஓபன் போட்டிகளில் விளையாடி பெடரர் இதுவரை 20 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here