T20 வேர்ல்ட் கப்.., முதல் தகுதி சுற்று ஆட்டம்.., இன்று தொடக்கம்.., வெற்றி யாருக்கு??

0
T20 வேர்ல்ட் கப்.., முதல் தகுதி சுற்று ஆட்டம்.., இன்று தொடக்கம்.., வெற்றி யாருக்கு??
T20 வேர்ல்ட் கப்.., முதல் தகுதி சுற்று ஆட்டம்.., இன்று தொடக்கம்.., வெற்றி யாருக்கு??

பெண்கள் உலக கோப்பை தொடருக்கான முதல் தகுதி சுற்று ஆட்டம் இன்று அபுதாபியில் உள்ள சயீத் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது.

மகளிர் T20 உலக கோப்பை

பெண்களுக்கான T20 உலக கோப்பை தொடர் அடுத்த ஆண்டு பிப்ரவரி 9 முதல் 26 ஆம் தேதி வரை தென்னாப்பிரிக்காவில் நடைபெற உள்ளது. இந்த உலக கோப்பை தொடரில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்க உள்ளனர். அதன்படி தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், இலங்கை, மேற்கிந்திய தீவுகள் ஆகிய அணிகள் நேரடியாக உலக கோப்பை சுற்றுக்கு தேர்வாகியுள்ளனர்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

மீதமுள்ள இரண்டு இடங்களுக்காக ஜிம்பாப்வே, அயர்லாந்து, பங்களாதேஷ், தாய்லாந்து ஆகிய அணிகள் தகுதி சுற்று ஆட்டத்தில் மோத உள்ளனர். அதன்படி முதல் தகுதிச் சுற்று ஆட்டம் இன்று நடைபெறவுள்ளது. இந்த முதல் போட்டியில் ஜிம்பாப்வே மற்றும் அயர்லாந்து அணிகள் மோத உள்ளனர்.

IND VS AUS 2 T20.., நாக்பூரில் மிரட்டும் மழை.., வெளியாகிய பிட்ச் ரிப்போர்ட்!!!

இதை தொடர்ந்து அடுத்த போட்டியில் பங்களாதேஷ் மற்றும் தாய்லாந்து அணிகள் போட்டியில் உள்ளனர். இந்த இரு போட்டிகளில் வெற்றி பெறும் அணிகள் உலக கோப்பை சுற்றுக்கு தகுதி பெறும். எனவே எந்த அணி வெற்றி பெற்று உலக கோப்பை சுற்றுக்குள் நுழையும் என பொறுத்திருந்து பார்க்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here