கண்ணம்மாவிடம் வாழ தயாராகும் பாரதி?? டிஎன்ஏ டெஸ்ட் எடுக்கப்படுமா?? பல திருப்பங்களுடன் பாரதி கண்ணம்மா!!

0
கண்ணம்மாவிடம் வாழ தயாராகும் பாரதி?? டிஎன்ஏ டெஸ்ட் எடுக்கப்படுமா?? பல திருப்பங்களுடன் பாரதி கண்ணம்மா!!
கண்ணம்மாவிடம் வாழ தயாராகும் பாரதி?? டிஎன்ஏ டெஸ்ட் எடுக்கப்படுமா?? பல திருப்பங்களுடன் பாரதி கண்ணம்மா!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா ஏராளமான ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வரும் சீரியலாக விளங்கி வருகிறது. இந்நிலையில் இன்று எபிசோடில் என்ன நடக்கிறது என்பதை பார்க்கலாம்.

பாரதி கண்ணம்மா சீரியல்:

தீவிரவாதிகளால் மனித வெடிகுண்டாக மாற்றப்பட்ட பாரதியை கண்ணம்மா, தன் உயிரையும் துட்சபடுத்தாமல் ஆபத்தில் இருந்து காப்பாற்றினார். இதையடுத்து பாரதி, கண்ணம்மா, குழந்தைகள் சௌந்தர்யா உட்பட அனைவரும் வீட்டிற்கு சென்று விட்டனர். அப்போது கண்ணம்மாவும் சௌந்தர்யாவும் பேசி கொண்டு இருந்த போது, லட்சுமிக்கு எல்லா உண்மையும் தெரிஞ்சிருச்சு என்று சொல்கிறார். இதை கேட்டு சௌந்தர்யா நல்லதுதான், எப்போ தெரிய போகிற விஷயம் இப்போவே தெரியட்டும்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

ஆனா ஹேமாவுக்கு நீதான் அம்மானு தெரிஞ்சா என்ன ஆகும்னு தெரியல, இத்தனை நாளா அப்பா பொய் சொல்லிட்டு இருந்துக்காருனு, பாரதிய அவ வெறுக்க கூட வாய்ப்பு இருக்குன்னு சொல்லி வருத்தப்படுகிறார் சௌந்தர்யா. இதையடுத்து கண்ணம்மா, இன்னைக்கு சமைக்கிறேன் என சொல்ல சௌந்தர்யாவும் சரி என்று சொல்கிறார். மேலும் பாரதியிடம் , கண்ணம்மா தான் இன்னைக்கு சமைக்கிறா என சொல்ல அவரிடம் ஒரு ரியாக்ஷனும் இல்லை.

கோபிக்கு இப்படி ஒரு கேவலமான புத்தியா?? சீரழிய இருக்கும் இனியாவின் வாழ்க்கை.., பாக்கியா எடுத்த அதிரடி முடிவு!!

அதற்கு ஏன் கண்ணம்மா சமைக்க கூடாதா?? சௌந்தர்யா கேட்க, அதற்கு பாரதி இப்பதான் பெரிய ஆபத்துல இருந்து தப்பித்து வந்துருக்க அவள ஏன் சமைக்க சொல்றீங்க என கேட்கிறார். இதையடுத்து எல்லாருக்கும் கண்ணம்மா, சாப்பாடு பரிமாறுகிறார். பாரதியும் எதுவும் சொல்லாமல் கண்ணம்மா சமைத்த சாப்பாட்டை சாப்பிடுகிறார். இதை பார்த்து சௌந்தர்யா,ஆச்சரியத்தின் உச்சத்திற்கே சென்று விட்டார்.

மேலும் சௌந்தர்யா, பாரதியிடம் தனியாக பேசுகிறார், இப்போவாச்சும் கண்ணம்மாவ புரிஞ்சிக்கோ அவ உன் மேல உயிரையே வச்சிருக்கா, நீயும் அவ மேல அன்பு வைச்சு இருக்க. நீ அவ கூட சேர்ந்து வாழனும்னு சொல்லல, ஆனா யோசிச்சு நல்ல முடிவா எடு என்று சொல்லிவிட்டு சென்று விட்டார். இதையடுத்து பாரதி என்ன முடிவு எடுப்பார், கண்ணம்மாவும் பாரதியும் சேர்ந்து விடுவார்களா? என பல்வேறு ட்விஸ்டுகளுடன் இனி வரும் எபிசோடுகள் நகர உள்ளன. ஒருவேளை டிஎன்ஏ டெஸ்ட் எடுப்பாரா?? இல்லையே அப்படியே கண்ணம்மாவை ஏற்றுக்கொள்வாரா?? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here