டென் பின் பவுலிங் இறுதி போட்டி – சாம்பியன் பட்டம் வென்ற தமிழக வீராங்கனை!!

0

டென் பின் பவுலிங் தொடருக்கான இறுதி ஆட்டத்தில் தமிழக மற்றும் தெலுங்கானா வீரர், வீராங்கனைகள் சிறப்பாக விளையாடி சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றனர்.

டென் பின் பவுலிங் இறுதி போட்டி!!

பெங்களூருவில் 31 வது டென் பின் பவுலிங் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. இந்த போட்டிக்கு இந்தியாவில் உள்ள மாநிலங்களில் இருந்து பல வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றனர். இந்த தொடரில் அனைத்து தகுதி சுற்று ஆட்டங்கள் முடிவடைந்த நிலையில் நேற்று இறுதி போட்டி நடைபெற்றது.

இதில் பெண்கள் பிரிவுக்கான டென் பின் பவுலிங் இறுதிப் போட்டியில் தமிழக வீராங்கனை சபீனா, கர்நாடகாவின் ஜூடி ஆல்பனை எதிர்கொண்டார்.இவர்கள் இருவருக்கு இடையிலான ஆட்டத்தில் சபீனா 273-261 என்ற கணக்கில் கர்நாடக வீராங்கனையை வீழ்த்தி அசத்தலான வெற்றியை கைப்பற்றினார்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இதே போன்று நடைபெற்ற ஆண்கள் பிரிவுக்கான டென் பின் பவுலிங் போட்டியில் தெலுங்கானா வீரர் நவீன் சித்தம், நடப்பு சாம்பியனான கர்நாடகாவின் ஆகாஷ் அசோக்குமாரை எதிர்கொண்டார். இந்த இருவருக்கும் இடையில் அரங்கேறிய பரபரப்பான ஆட்டத்தில் தெலுங்கானா வீரர் 483-457 என்ற கணக்கில் நடப்பு சம்பியனை வீழ்த்தி பட்டத்தை தட்டிச் சென்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here