உங்க போனுக்கும் 5ஜி நெட்வொர்க் வேணுமா? அப்போ உடனே இதை பண்ணுங்க! இல்லைன்னா அவ்ளோதான்!!

0

இந்தியாவில், 5ஜி நெட்வொர்க் அறிமுகமாக உள்ள நிலையில் இந்த அப்டேட் உங்களுக்கும் கிடைப்பதற்கான வழிமுறைகள் குறித்த பதிவுகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

பயனர்களுக்கு அறிவிப்பு :

இந்தியாவில் மத்திய அரசு கொண்டுவந்த 5ஜி நெட்வொர்க் சேவை, முதற்கட்டமாக சென்னை, டெல்லி, மும்பை ஆகிய நகரங்களில் அமலுக்கு வர உள்ளது. அக்டோபர் மாத இறுதியில், அமலுக்கு வரும் இந்த சேவை 2024 க்குள் அனைவருக்கும் கிடைத்துவிடும் என சொல்லப்படுகிறது. இந்த சேவை குறித்த, முக்கிய அப்டேட்டுகளை ஏர்டெல் நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்த நெட்வொர்க் பெற விரும்பும் பயனர்கள், வழக்கமாக தங்கள் வைத்திருக்கும் சிம் கார்டை மாற்றி 5ஜி சிம் கார்டு வாங்க வேண்டி இருக்கும். ஆனால் தற்போது, இந்த செயல்முறை தேவை இல்லை என்றும் நீங்கள் வைத்திருக்கும் சிம் கார்டை நெட்வொர்க் செட்டிங்கில் சென்று மாற்றினாலே போதும் என ஏர்டெல் தங்கள் பயனர்களுக்கு அறிவித்துள்ளது.

இந்த சேவை 4ஜி யை விட 20-30 மடங்கு வேகமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சேவை, குறித்த விரிவான விவரங்கள் அடுத்தடுத்து வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here