தனுஷோட இந்த விஷயம் கண்டிப்பா நடந்தே தீரும்’ – பிரபலத்தின் ட்விட்டர் பதிவால் குஷியான ரசிகர்கள்!!

0

இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்து வரும் நானே வருவேன் திரைப்படத்தின் டீசர் வெளியீடு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

நானே வருவேன்:

தமிழ் சினிமா மட்டுமின்றி டோலிவுட், ஹாலிவுட் என கொடிகட்டி பறப்பவர் தான் நடிகர் தனுஷ். இவரது நடிப்பில் கடைசியாக வெளிவந்த ஜகமே தந்திரம், மாறன், தி க்ரே மேன் போன்ற படங்கள் ஓடிடியில் வெளியாகி தோல்வி அடைந்தது. ஒரு வருடமாக திரையில் நடிகர் தனுஷை காணாமல் வருத்தத்தில் இருந்த ரசிகர்களுக்கு, திருச்சிற்றம்பலம் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களின் சோகத்தை உடைக்கும் விதமாக அமைந்தது.

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

இதனை தொடர்ந்து நடிகர் தனுஷை வைத்து செல்வராகவன் நானே வருவேன் படத்தை இயக்கி முடித்துள்ளார். இப்படத்தில் நடிகர் தனுஷ் மிக மோசமான வில்லனாக நடித்திருப்பதாக அண்மையில் சில தகவல்கள் வெளியாகியது.மேலும் இவர்களது காம்போவில் வெளிவந்த காதல் கொண்டேன், புதுப்பேட்டை போன்ற படங்கள் தற்போது வரை கோலிவுட்டில் பேசி கொண்டிருக்கும் நிலையில், நானே வருவேன் திரைப்படத்திற்கு மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது. இதனை தொடர்ந்து படத்தின் ப்ரோமோஷனுக்காக பணிகள் மிக விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இப்படத்தின் தயாரிப்பாளர் தாணு தனது ட்விட்டர் பக்கத்தில் நானே வருவேன் திரைப்படத்தின் டீசர் குறித்து பதிவிட்டுள்ளார். அதாவது பதிவில், “எண்ணியது எண்ணியபடி, சொன்னது சொல்லியபடி #NaaneVaruvean செப்டம்பர் மாதம் வெளியீடு, மேலும் படத்தின் டீசர் செப்டம்பர் 15 நாளை வெளியாக இருக்கிறது. இந்த தகவல் தனுஷ் ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது, அதுமட்டுமின்றி திரையில் காண்பதற்கு ஆவலோடு மக்கள் காத்து கொண்டிருக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here