மதுப்பியர்களே ஷாக்கிங் நியூஸ் – மே 22ம் தேதி டாஸ்மாக் கடைகள் இயங்காது – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!!

0
மதுப்பியர்களே ஷாக்கிங் நியூஸ் - மே 22ம் தேதி டாஸ்மாக் கடைகள் இயங்காது - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!!
மதுப்பியர்களே ஷாக்கிங் நியூஸ் - மே 22ம் தேதி டாஸ்மாக் கடைகள் இயங்காது - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!!

தூத்துக்குடி மாவட்டத்தில் பிரபல ஆலையான ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து வெளியேறும் கழிவுகளால் சுற்றியுள்ள பகுதிகளில் இருக்கும் மக்கள் பலரும் நோய்வாய்பட்டு அவதிப்பட்டு வந்தனர். இதனால் அந்த ஆலையை மூடக்கோரி கடந்த 2018ல் மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தினர்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

அமைதி போராட்டமாக போய்க் கொண்டிருந்த நிலையில் போராட்டத்தின் 100-வது நாளாக கடந்த 2018 மே மாதம் 22ம் தேதி அன்று கலவரமாக மாறி பூகம்பம் வெடித்தது. போராட்டத்தை தடுக்க காவல்துறையினர் அத்து மீறி நடந்து கொண்டனர். அப்போது காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

அதில் 11 ஆண்கள், 2 பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த அதிமுக ஆட்சியின்போது நடைபெற்ற இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது என்று தான் சொல்ல வேண்டும். இவர்கள் ஆட்சி கவிந்ததற்கும் இதுவே முக்கிய காரணம் என்று பல அரசியல்வாதிகள் கூறினர்.

IPL 2023 CSK vs DC: டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் பேட்டிங் தேர்வு!!

இந்நிலையில் ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூட்டில் இறந்தவர்களின் ஐந்தாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி வருகிற 22ம் தேதி தூத்துக்குடியில் நடைமுறையில் இருக்கும் கிட்டத்தட்ட 53 டாஸ்மாக் கடைகள் மற்றும் தனியார் பார்கள் உள்ளிட்ட அனைத்து கடைகளும் மூடப்படுகிறது என்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் டாக்டர் செந்தில்ராஜ் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். உத்தரவை மீறி கடையை திறந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் எச்சரித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here