இந்திய அணியை 3 பிரிவாக பிரித்த பிசிசிஐ…, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தை வெல்ல போட்ட பலே பிளான்!!

0
இந்திய அணியை 3 பிரிவாக பிரித்த பிசிசிஐ..., உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தை வெல்ல போட்ட பலே பிளான்!!
இந்திய அணியை 3 பிரிவாக பிரித்த பிசிசிஐ..., உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தை வெல்ல போட்ட பலே பிளான்!!

இங்கிலாந்தில் உள்ள ஓவல் மைதானத்தில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டி வரும் ஜூன் 7ம் தேதி முதல் நடைபெற இருக்கிறது. இந்த போட்டியில், ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக இந்திய அணி உலக கோப்பையை வெல்லும் நோக்கில் மோத உள்ளது. தற்போது, இந்திய வீரர்கள் அனைவரும் ஐபிஎல் தொடரில் கவனம் செலுத்தி வருவதால், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான பயிற்சியை தொடக்காமலேயே உள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்நிலையில், பிசிசிஐயானது இந்திய வீரர்கள் பயிற்சிக்கான திட்டமிடலே வெளியிட்டுள்ளது. அதாவது, ஐபிஎல் தொடரின் லீக் சுற்றுகள் அனைத்தும் நாளையுடன் (மே 21) முடிவடைய உள்ளது. இதில், பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறாத அணிகளில் உள்ள இந்திய வீரர்கள் முதலில் இங்கிலாந்துக்குச் சென்று தங்களது பயிற்சியை தொடங்க உள்ளனர்.

மதுப்பியர்களே ஷாக்கிங் நியூஸ் – மே 22ம் தேதி டாஸ்மாக் கடைகள் இயங்காது – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!!

இதனை தொடர்ந்து, மே 26ம் தேதியுடன் ஐபிஎல்லின் பிளே ஆப் சுற்றுகள் முடிந்த பிறகு இறுதிப்போட்டிக்கு தகுதி பெறாத அணிகளில் உள்ள இந்திய வீரர்கள் 2வதாக இங்கிலாந்துக்கு புறப்பட்டு செல்வார்கள். மேலும் ஐபிஎல் இறுதிப் (மே 28) போட்டிக்கு பின், மற்ற இந்திய வீரர்கள் அனைவரும் மே 30 தேதி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கான பயிற்சியை தொடங்குவார்கள் என இந்திய அணியை 3 பிரிவாக பிரித்து பிசிசிஐ அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here