IPL 2023 CSK vs DC: டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் பேட்டிங் தேர்வு!!

0
IPL 2023 CSK vs DC: டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் பேட்டிங் தேர்வு!!
IPL 2023 CSK vs DC: டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் பேட்டிங் தேர்வு!!

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

CSK vs PBKS:

ஐபிஎல் தொடரின் 16 வது சீசனுக்கான, தனது கடைசி லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது, டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை எதிர்த்து விளையாடிகிறது. இதில், தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் CSK அணி இதுவரை 13 போட்டிகளில் விளையாடி 15 புள்ளிகளுடன் 2வது இடத்தில் உள்ளது. டெல்லியில் உள்ள அருண் ஜேட்லி மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில், CSK அணி வெற்றி பெற்றால் மற்ற அணிகளின் வெற்றி தோல்வியை எதிர்பாரமால் நேரடியாக பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இதே போல, டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியானது, இந்த ஐபிஎல் தொடரில், 13 போட்டிகளின் முடிவில் 10 புள்ளிகளை மட்டுமே பெற்று 9வது இடத்தில் உள்ளது. ஏற்கனவே பிளே ஆப் வாய்ப்பை இழந்துள்ள டெல்லி அணி, இன்றைய போட்டியில் வெற்றி பெற்றாலும் புள்ளிப் பட்டியலில் பெரிய மாற்றம் எதுவும் இருக்க வாய்ப்பில்லை. ஆனாலும், சொந்த மண்ணில் தங்களது பலத்தைக் காட்ட வேண்டி CSK அணிக்கு கடுமையான நெருக்கடி கொடுக்க கூடும். இதனால், இன்றைய போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

மக்களே தயாரா?? வங்கிகளில் சூப்பர் முதலீடு திட்டங்கள்.., சேமிப்புக்கான முழுவிபரம் உள்ளே!!

நேரம்: மதியம் : 3.30 PM

நேரலை: ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மற்றும் ஜியோ சினிமா

இரு அணிகளின் பிளேயிங் லெவன்:

சென்னை சூப்பர் கிங்ஸ் (பிளேயிங் லெவன்): ருதுராஜ் கெய்க்வாட், டெவோன் கான்வே, அஜிங்க்யா ரஹானே, அம்பதி ராயுடு, ஷிவம் துபே, மொயீன் அலி, ரவீந்திர ஜடேஜா, எம் எஸ் தோனி(w/c), தீபக் சாஹர், துஷார் தேஷ்பாண்டே, மகேஷ் தீக்ஷனா

டெல்லி கேப்பிட்டல்ஸ் (பிளேயிங் லெவன்): டேவிட் வார்னர்(கேட்ச்), பிலிப் சால்ட்(டபிள்யூ), ரிலீ ரோசோவ், யாஷ் துல், அமன் ஹக்கிம் கான், அக்சர் படேல், லலித் யாதவ், குல்தீப் யாதவ், சேத்தன் சகாரியா, கலீல் அகமது, அன்ரிச் நார்ட்ஜே

டாஸ்:
இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளது. இதையடுத்து டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் வீரர்கள் பில்டிங் செய்ய தயாராகி உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here