குறைக்கப்படும் பள்ளிப் பாடங்கள் – நிபுணர்கள் ஆலோசனை..!

0

கொரானா வைரஸ் பரவளின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது எனவே இதன் காரணத்தால் ஜூன் மாதம் திறக்க வேண்டிய பள்ளிகள் கூடங்கள் இப்போதைக்கு திறக்க வாய்ப்பில்லை என்றே தெரிகிறது.தமிழகத்தில் பள்ளிகள் ஆகஸ்ட் மாதம் அல்லது செப்டம்பர் மாதம் தான் திறக்க வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.எனவே இந்த ஆண்டு பள்ளி பாடங்களை நடத்துவது கடினம் பள்ளிப்பாடங்களை குறைக்கலாம் என ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

ஆன்லைன் மூலமாக வகுப்புகள்

கொரோனா காரணத்தால் உலகமே முடங்கி இருக்கிறது ஊரடங்கு காரணமாக கடந்த இரண்டு மாதங்களாக பள்ளி,கல்லுாரிகளுக்கு காலவரையின்றி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் பள்ளிகளை திறக்க முடியாததால் பள்ளி கல்லூரியின் வகுப்புகளை ஆன்லைன் மூலமா எடுத்து வருகின்றனர் ஆசிரியர்கள்.வரும் கல்வி ஆண்டில் மாணவர்கள் படிப்பதற்கும் கற்பிப்பதற்கும் பள்ளிகள் திறக்க காலதாமதம் ஆகுவதாலும் மிக கடினமாக இருக்கும் என்பதால் இந்த ஆண்டு அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளி பாடங்களை குறைக்கலாமா என பள்ளிக்கல்வித்துறை ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் வந்துள்ளது.  முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

கல்வித்துறையின் ஆலோசனை 

கல்வித்துறையின் ஆய்வுக்  குழுவினர் நேற்று இதனைப்[பற்றி ஆலோசனை  நடத்தினர். அப்போது, பாடத்திட்டத்தை குறைப்பதா அல்லது பாடங்களை குறைப்பதா என கேள்விகள் எழுந்தன.இது தொடர்பாக பள்ளி கல்வித்துறை வட்டாரங்கள் கூறியதாவது குறித்த நேரத்தில் பள்ளிகளை திறந்து, பாடம் நடத்த முடியாததால், கல்வி முறையில், சில மாற்றங்களை செய்ய வேண்டியுள்ளது. முக்கியமாக, மாணவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படாத வகையில், பாடச் சுமையை குறைக்க வேண்டும்.தமிழக அரசின், புதிய பாடத்திட்டத்தில் உள்ள அனைத்து பாடங்களையும் நடத்தினால், அரசு நிர்ணயிக்கும் காலத்தில், பருவத் தேர்வுகளை நடத்த முடியாமல் சிக்கல் ஏற்படும். எனவே, பருவ தேர்வு நடத்தாமல் காலாண்டு அரையாண்டு மற்றும் முழு ஆண்டு தேர்வுகள் மற்றும் நடத்தவும் பாடங்களின் அளவை குறைக்கலாம் என, ஆலோசிக்கப்பட்டு வருகிறது. சிலர் பாடத்திட்டத்தை குறைக்கலாம் என்கின்றனர்.

பாடத்திட்டத்தை குறைப்பது என்பது, அடிப்படை கல்வியில், சில அம்சங்களை தவிர்த்து பாடம் நடத்தி, அவர்களை அடுத்த நிலைக்கு அனுப்பவதாகும்.பாடத்திட்டங்களின் சில அம்சங்களை விட்டு விட்டு, பாடம் நடத்தினால், சில அடிப்படை தகவல்களையும், அதற்கான கல்வியறிவையும் பெறாமல், மாணவர்கள் அடுத்த ஆண்டுக்கு முன்னேறிச் செல்லும் நிலை ஏற்படும். அதனால், அடுத்த கல்வியாண்டில், அவர்கள் படிக்கும் பாடங்களுக்கு அடிப்படை தெரியாமல், பாடங்களை புரிந்து கொள்வதில் சிக்கல் ஏற்படும்.எனவே, பாடத்திட்டத்தை குறைப்பதற்கு பதில், கூடுதல் பாடங்கள் இருந்தால், அவற்றை மட்டும் குறைத்துக் கொள்ளலாம் என்ற, கருத்து எழுந்துள்ளது. இது தொடர்பாக, கல்வியாளர்கள் மற்றும் ஆசிரியர்களின் கருத்துகளை கேட்டு, அடுத்தகட்ட முடிவுகள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு, பள்ளி கல்வி வட்டாரங்கள் தெரிவித்தன.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here