டி20 உலகக்கோப்பை நடைபெறுமா..? விரைவில் முடிவெடுக்கும் ஐசிசி..!

0

கொரோனா பரவல் காரணமாக அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெறவிருக்கும் உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் போட்டி திட்டமிட்டபடி நடக்குமா..? என்ற சந்தேகம் எழுந்தது. அதற்காக ஆலோசனை கூட்டம் நேற்று வெள்ளிக்கிழமை ஐசிசி நிர்வாகிகள் வீடியோ கான்பிரன்ஸ் மூலம் பங்கேற்றனர். இதில் பிசிசிஐ தலைவர் கங்குலி உள்பட 18 பேர் கலந்து கொண்டனர்.

டி20 உலகக்கோப்பை போட்டி

ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கும் டி20 உலக கோப்பை போட்டி நடக்குமா நடக்காத என குறித்து ஜூன் 10-ந்தேதி முடிவு செய்யப்படும் என ஐசிசி தெரிவித்துள்ளது.இதற்ககாக ஐ.சி.சி. தலைவர் ஷசாங்க் மனோகர் தலைமையில் நடைபெற்ற இந்த வீடியோ கான்பரன்ஸ் கூட்டத்தில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் அதன் தலைவர் கங்குலி உட்பட மொத்தம் 18 பேர் கலந்து கொண்டனர்.நேற்று நடத்தப்பட்ட வீடியோ கான்பரன்ஸில் 16 அணிகள் இடையிலான 7-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் வருகிற அக்டோபர் 18-ந் தேதி முதல் நவம்பர் 15-ந் தேதி வரை நடத்தலாம் என திட்டமிட்டது.

கொரோனா வைரஸ் பார்வையின் அச்சத்தால் பல்வேறு நாடுகளில் பல கட்டுப்பாடுகள் மற்றும் ஊரடங்கு அமலில் இருக்கிறது இந்த போட்டிக்காக ஒரே இடத்தில் அத்தனை அணிகளும் கூடுவது சிரமம் என்று கருதப்படுகிறது. இதனால் இந்தக் கூட்டத்தில் டி20 உலகக்கோப்பை போட்டியை 2 ஆண்டுக்கு தள்ளி வைப்போமா என்று கருதப்பட்டது. ஆனால் ஐ.சி.சி. இதுகுறித்து எந்த முடிவையும் எடுக்காமல் தள்ளி வைத்தது.எனவே இதைப்[பற்றி ஜூன் மாதம் 10ந் தேதி முடிவு செய்யப்படும் என  தெரிவிக்கப்பட்டுள்ளது

ஐ.சி.சி வெளியிட்டுள்ள அறிக்கை

சர்வதிஷா கிரிக்கெட் ஐ.சி.சி.யின் கூட்டத்தில் போட்டியின் ரகசியத் தன்மை அத்துமீறுவதாக வாரிய உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு உடனடியான கவனம் மற்றும் தெளிவான பதில் வேண்டும் ஐ.சி.சியின் விவகாரங்களின் சில பல நல்ல மற்றும் ரகசிய தன்மையும் மிக உயர்ந்த ஆளுமைக்கு ஏற்ப உறுதி செய்வதற்கு உடனடி கவனம் தேவை என்று உணரப்பட்டது.

இது தொடர்பாக ஐ.சி.சி நெறிமுறை அதிகாரி தலைமையில் சுதந்திரமான விசாரணையை தொடங்குவது என்று ஒருமனதாக உறுதி செய்யப்பட்டது. ஜூன் 10-ந்தேதி நடைபெறும் கூட்டத்தில் அனைத்து விஷயங்கள் குறித்தும் முடிவு செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here