வீட்டிற்கே வரும் 100 நாள் வேலைத்திட்ட சம்பளம் – தமிழக அரசு உத்தரவு

0

கொரோனா பரவலால் ஊரடங்கு போட்டுட்டள்ளது எனவே அதில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணங்களை தமிழக அரசு அறிவித்தும் அளித்தும் வருகிறது. கொரோனாவால் பொருளாதாரமே சரிந்தது அதை மீட்டெடுக்கும் வகையில் அரசும் பல்வேறு முயற்சிகளையும் செய்து வருகிறது.சிறு தொழில் செய்வோருக்கு நிதியுதவி  வழங்கப்படுகின்றன. சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு கூடுதல் கடன் வழங்க வேண்டும் என்றும், விவசாயிகளுக்கான கடனுதவியை உடனடியாக வழங்க வேண்டும் என்றும் அனைத்து வங்கிகளை முதலமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.

100 நாள் பணியாளர்களுக்கு வீட்டிற்கே சென்று ஊதியம் வழங்க உத்தரவு 

இவ்வேளையில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை (100 நாள் வேலை திட்டம்) பணியாளர்கள் அவர்களது ஊதியத்தை அவர்களது வங்கி கணக்கில் இருந்து அல்லது வங்கி சென்று சம்பளத்தை பெற்று வந்தனர் ஆனால் கொரோன காரணத்தால் பலரால் வங்கி சென்று அவர்களது ஊதியத்தை பெற முடியவில்லை எனவே 100 நாள் திட்ட பணியாளர்களின் நலனை கருத்தில் கொண்டு அவர்களது ஊதியத்தை அவர்களது வீட்டிற்கே சென்று சரியாக வழங்குமாறு தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.100 நாள் வேலை உறுதி திட்ட பணியாளர்களுக்கான தின ஊதியமானது ரூபாய் 229 இருந்து ரூபாய் 256 ஆக உயர்த்தப்பட்டது மற்றும் வீட்டிற்கே சென்று ஊதியத்தை வழங்கும் நடைமுறையானது மூன்று மாதங்களுக்கு மட்டுமே அமலில் இருக்கும் எனவும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here