Thursday, May 30, 2024

ஏற்றுமதிக்கான சிறந்த மாநிலங்கள் பட்டியலில் தமிழகம் 3 ஆம் இடம் – முதல்வர் மகிழ்ச்சி!!

Must Read

ஏற்றுமதிக்கான அனைத்து அம்சங்களிலும் சிறந்து விளங்கும் மாநிலங்களில் தமிழகம் மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது என்று மகிழ்ச்சியாக தெரிவித்துள்ளார், முதல்வர் பழனிசாமி.

பட்டியல் வெளியிட்ட “நிதி ஆயோக்”:

மத்திய அமைச்சகத்தின் ஒரு பகுதியாக கடந்த 2015 ஆம் ஆண்டில் இருந்து செயல்படுகிறது. “நிதி ஆயோக்”. இதன் முக்கிய அம்சம் அரசுக்கு தேசிய வளர்ச்சி கொள்கைகளை பரிந்துரைப்பதும், மாநிலங்களை அவற்றின் சுகாதாரம், நீராதாரம் மற்றும் பல வித அம்சங்களை ஆராய்ந்து தரவரிசை பட்டியலை வெளியிடுவது தான். இதன் தலைவராக தற்போது ராஜீவ் குமார் செயல்படுகிறார்.

ENEWZ வலைதள பக்கங்களுக்கு கிளிக் செய்யவும்

nithi aayog
nithi aayog

தற்போது இந்தியாவில் ஏற்றுமதிக்கான சிறந்த மாநிலங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியல் ஒரு மாநிலத்தின் அரசாங்க கொள்கை, வர்த்தகம், வர்த்தகம் செய்வதற்கான ஏற்ற காலநிலை, ஏற்றுமதி செய்வதற்கான ஏற்ற சூழல் இவற்றை கொண்டு தயாரிக்கப்படுகிறது. அதில் தேசிய அளவில் தமிழகம் 3 ஆம் இடம் பிடித்துள்ளது.

முதல்வர் பெருமிதம்:

இந்தியாவில் குஜராத், மகாராஷ்டிரா, தெலுங்கானா,தமிழ்நாடு மற்றும் கர்நாடக இந்த ஐந்து மாநிலங்கள் தான் 70 சதவீத ஏற்றுமதியை செய்கிறது. தற்போது வெளியிடப்பட்டுள்ள இந்த பட்டியலில் தமிழகம் மூன்றாம் இடம் பிடித்துள்ளது.

தமிழகத்தில் ஆட்டோமொபைல் ஏற்றுமதி 45 சதவீதமாகவும், மின்னணு ஏற்றுமதி 19 சதவீதமாகவும், ஆடைகள் ஏற்றுமதியில் 19 சதவீதமாகவும் உள்ளது. இந்த பட்டியலில் முதல் இடத்தில் குஜராத் மாநிலமும், இரண்டாம் இடத்தில் தலைநகர் டெல்லியும் உள்ளது.

கம்மியா இறங்குது…அதிகமா கூடுது..- இன்று மீண்டும் தங்கத்தின் விலையில் ஏற்றம்!!

export in tamila nadu
export in tamila nadu

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இந்த செய்தினை தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பெருமிதத்துடன் பகிர்ந்துள்ளார். ஏற்றுமதிக்கான சிறப்பம்சங்களாக சிறந்த நிர்வாகத்திறனையும், திறன்மிக்க மனிதவளத்தையும், பல தொழிற்சாலைகளையும், ஏற்றுமதிக்கான மூலக்கூறுகளையும், 5 பெரிய துறைமுகங்கள் மற்றும் 22 சிறிய துறைமுகங்களை கொண்டுள்ளது தமிழகம். இது தமிழக மக்கள் அனைவரும் மகிழ்ச்சி கொள்ளும் விஷயமாகவும் கருதப்படுகிறது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

தமிழக மக்களுக்கு நற்செய்தி., இன்று முதல் 4 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் எச்சரிக்கை!!

தமிழகத்தில் கோடை வெயில் கொளுத்தி வருவதால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் உள்ளிட்ட பலரும் கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். இந்த நிலையில் இந்திய வானிலை ஆய்வு...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -