2,100 சுகாதார பணியாளர்கள் நியமனம் – தமிழக அரசு உத்தரவு!!!

0

தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிக்காக 2,100 சுகாதார பணியாளர்கள் நியமனம் செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

Instagram  => Follow செய்ய கிளிக் பண்ணுங்க!!

2,100 சுகாதார பணியாளர்கள் நியமனம்:

தமிழ்நாட்டில் கொரோனா இரண்டாவது அலை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. நாள்தோறும் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தமிழகத்தில் கொரோனா பரவல் மிக உக்கிரமாக உள்ளது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை முழு வீச்சில் மேற்கொண்டு வருகிறார்.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு உலகத் தமிழர்கள் உதவ வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்; இதனை தொடர்ந்து சுமார் 2,100 சுகாதார பணியாளர்கள் கொரோனா தடுப்பு பணிகளுக்காக நியமனம் செய்து  தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இப்படி நியமனம் செய்துள்ள 2100 சுகாதார பணியாளர்கள் 6 மாத கால ஒப்பந்தத்தில் பணியமர்த்தபட்டுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 2,100 சுகாதார பணியாளர்களுக்கு மாதம் ரூ.10,000 ஊதியம் வழங்கப்படும் என்றும் இவர்கள் தேவைக்கேற்ப பல்வேறு மாவட்டங்களில் பணியில் அமர்த்தப்படுவார்கள் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here