கருப்பு பூஞ்சை நோய் தொற்று நோயாக அறிவிப்பு – அரசாணையை வெளியிட்ட தமிழக அரசு!!

0

தமிழகத்தில் தற்போது கொரோனா நோய்த்தொற்றினை தொடர்ந்து கருப்பு பூஞ்சை நோய் அதிகமாக கண்டறியப்பட்டு வருகிறது. தற்போது இதுகுறித்து தமிழக சுகாதாரத்துறை செயலர் கருத்து தெரிவித்துள்ளார்.

கருப்பு பூஞ்சை:

தமிழகத்தில் தற்போது கருப்பு பூஞ்சை சற்று அதிகமான அளவில் காணப்பட்டு வருகிறது. இதனால் கொரோனா தொற்றினை போல் இதுவும் ஓர் உயிக்கொல்லி நோயாக மாறிவிடுமோ என்று மக்கள் அனைவரும் கடுமையான அச்சத்துக்கு உள்ளாகி வருகின்றனர். தற்போது அந்த வகையில் மதுரை மாநகரில் மட்டும் இன்று 50 பேருக்கு கருப்பு பூஞ்சை நோய் உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

மேலும் இந்த நோயை குணமடுத்த முடியுமா என்று மக்கள் அச்சமடைந்து வரும் நிலையில் தற்போது இதுகுறித்து சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் விளக்கமளித்துள்ளார். அதன்படி அவர் கூறியதாவது, கருப்பு பூஞ்சை நோயானது முழுவதும் குணப்படுத்தக்கூடிய நோய் தான். எனவே இதுகுறித்து மக்கள் பதட்டமடைய தேவையில்லை என்று தெரிவித்துள்ளார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

உத்தரகண்ட் மாநிலத்தில் கொரோனாவை தொடர்ந்து பரவி வரும் கருப்பு பூஞ்சை நோய்

கொரோனா பரிசோதனை கட்டணம் குறைப்பு – தமிழக அரசின் அடுத்த அதிரடி!!

மேலும் தற்போது தமிழக அரசு கருப்பு பூஞ்சை நோயையை தொற்று நோயாக அறிவித்துள்ளது. அதற்கான அரசாணையையும் வெளியிட்டுள்ளது என்றும் தமிழகத்தில் கருப்பு பூஞ்சை குறித்து ஆய்வு செய்ய தனி குழு அமைக்கப்படவுள்ளது என்றும் அவர் தெரிவித்தார். மேலும் பேசிய அவர், கருப்பு பூஞ்சை நோய் கண்டறியப்பட்டால் உடனே அரசிற்கு தெரிவிக்கவேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here