கொரோனா பரிசோதனை கட்டணம் குறைப்பு – தமிழக அரசின் அடுத்த அதிரடி!!

0

தமிழகத்தில் தற்போது தனியார் மையங்களில் கொரோனா பரிசோதனைக்கு அதிக கட்டணம் வாங்கப்பட்டு வருகிறது. தற்போது அதன் கட்டணத்தை தமிழக அரசு குறைத்துள்ளது.

கொரோனா பரிசோதனை:

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா நோய்த்தொற்று கடும் உச்சம் அடைந்து வருகிறது. இதன் எதிரொலியாக தற்போது தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 35 ஆயிரத்தை நெருங்கி வருகிறது. தமிழகத்தில் தற்போது கடுமையான ஊரடங்கு அமலில் இருந்து வந்தும் பாதிப்பின் எண்ணிக்கை தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்து வருகிறது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்நிலையில் தமிழகத்தில் தனியார் மருத்துவமனை மற்றும் ஆய்வுக்கூடங்களில் கொரோனா பரிசோதனைக்கு அதிக கட்டணம் வசூலிப்பதாக தொடர்ந்து தகவல் எழுந்து வந்த நிலையில் தற்போது இதுகுறித்து தமிழக அரசு அதிரடி நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டுள்ளது. அதன்படி கொரோனா பரிசோதனைக்கு ரூ.1,200 வாங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது ரூ.900 ஆக குறைக்கப்பட்டுள்ளது.

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

கொரோனாவில் இருந்து நம்மை காற்று தான் காப்பாத்தும் – மத்திய அரசு தகவல்!!

அதேபோல் முதலமைச்சர் காப்பீட்டு அட்டை வைத்திருப்பவர்களுக்கு ரூ.800ல் இருந்து ரூ.550 ஆகவும், குழுவாக சென்று பரிசோதனை மேற்கொள்பவர்களுக்கு ரூ.600ல் இருந்து ரூ.400 ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது. மேலும் வீட்டிற்கு நேரடியாக சென்று பரிசோதனையை மேற்கொண்டால் மேலே குறிப்பிட்டுள்ள கட்டணத்தில் இருந்து கூடுதலாக ரு.300 செலுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். இந்த அறிவிப்பு மக்களுக்கு சற்று ஆறுதலை அளித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here