நவம்பர் 26 இல் நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டம் – தமிழக அரசு ஊழியர்கள் பங்கேற்க தடை!!

0
Chief Secretary of Tamil Nadu Shanmugam
Chief Secretary of Tamil Nadu Shanmugam

இந்தியாவில் அரசு துறைகளை தனியார் மயமாக்கும் மத்திய அரசின் நடவடிக்கைக்கு எதிராக பல ஆண்டுகளாக அரசுத்துறை ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இருப்பினும் ரயில்வே துறை போன்றவற்றிலும் தனியார் முதலீடுகள், பங்கீடுகள் வரத் தொடங்கி உள்ளன. இதனை எதிர்த்து வரும் 26ம் தேதி மத்திய அரசு ஊழியர்கள் கூட்டமைப்பு மற்றும் இதர அமைப்புகள் இணைந்து நாடு தழுவிய வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட திட்டமிட்டு உள்ளனர். இதில் பங்கேற்க தமிழக அரசு ஊழியர்களுக்கு அதிரடி தடை விதிக்கப்பட்டு உள்ளது.

Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

நாட்டின் பொதுத்துறை நிறுவனங்களின் தனியார்மயமாக்கல், புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குதல் மற்றும் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்புதல் போன்ற மூன்று விதமான கோரிக்கைகளை முன்வைத்து மத்திய அரசு ஊழியர்கள் கூட்டமைப்பு, மாநில அரசு பணியாளர்களுடன் இணைந்து வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.

இந்நிலையில் வரும் 26ம் தேதி தமிழகத்தில் அனைத்து துறை அரசு ஊழியர்களும் விடுப்பு எடுக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக அனைத்து துறை செயலாளர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமை செயலாளர் சண்முகம் அவர்கள் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளார். அதில் 26ம் தேதி போராட்டத்தில் பங்கேற்க விடுப்பு எடுக்கும் ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டு உள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

மருத்துவ காரணங்கள் தவிர்த்து போராட்டத்தில் பங்கேற்க விடுப்பு எடுத்தால் சம்பள பிடித்தம், தற்காலிக ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டால் வேலைவாய்ப்பு ரத்து உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. வரும் 26ம் தேதி அனைத்து துறை ஊழியர்களும் தவறாது பணிக்கு வர வேண்டும் எனவும் தலைமை செயலாளர் உத்தரவிட்டு உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here