நாடு முழுவதும் ஊரடங்கு மேலும் நீட்டிப்பு?? மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை!!

0
PM Modi
PM Modi

கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் 24ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. ஆரம்ப காலத்தில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் பின்பற்றப்பட்டு வந்த பொதுமுடக்கம் நாளடைவில் தளர்வுகளுடன் நீட்டிக்கப்பட்டது. தற்போது கொரோனா தொற்று எண்ணிக்கை குறைந்து, குணமடைவோர் எண்ணிக்கை அதிகரித்து உள்ள நிலையில் மேலும் ஊரடங்கை நீட்டிக்கலாமா?? என்பது குறித்து பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் காணொளி வாயிலாக ஆலோசனை நடத்த உள்ளார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

நாடு முழுவதும் இதுவரை 9,140,312 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ள நிலையில் 133,773 (1.46%) பேர் உயிரிழந்து உள்ளனர். ஆறுதல் அளிக்கும் தகவலாக 8,561,444 (93.67%) பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். உலக அளவில் குறைவான கொரோனா உயிரிழப்பு விகிதம் கொண்ட நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்துள்ள நிலையில் வடமாநிலங்களில் 2வது அலை தொடங்கி உள்ளது.

video conference meeting with pm
video conference meeting

இதனால் பல மாநில அரசுகள் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்து உள்ளன. அதுமட்டுமின்றி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் முடுக்கி விட்டு உள்ளன. நாடு முழுவதும் நவம்பர் 30 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ள நிலையில், ஒவ்வொரு முறை பொதுமுடக்கம் நீட்டிக்கப்படுவதற்கு முன்னர் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் அனைத்து மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

அந்த வகையில் நாளை டெல்லியில் இருந்து காணொளி வாயிலாக பிரதமர் மோடி ஆலோசனை நடத்த உள்ளார். இதில் மாநிலங்களில் உள்ள கொரோனா பரவல் விகிதம், தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் தடுப்பு மருந்து சோதனை குறித்து கேட்டறிய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் நிவர் புயல் வலுவடைந்து உள்ள நிலையில் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here