சென்னைவாசிகளுக்கு இனி ‘இ-பாஸ்’ கிடையாது – தமிழக அரசு உத்தரவு..!

0
E pass
E pass

தமிழகத்தில் சென்னையை மையமாக வைத்து கொரோனா வேகமாக பரவி வரும் வேளையில் சென்னையில் இருந்து வெளியூர் செல்ல விரும்பும் நபர்களுக்கு இ-பாஸ் வழங்குவது நிறுத்தப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

கொரோனா பாதிப்பு:

தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் மிக அதிகமாக உள்ளது. ஒரு நாளில் கொரோனா உறுதி செய்யப்படுபவர்கள் எண்ணிக்கையும் 2 ஆயிரத்தை நெருங்கி விட்டது. உயிரிழப்புகளும் கடந்த பல நாட்களாக இரட்டை இலக்கத்தில் உள்ளது. அதிலும் சென்னையை மையமாக வைத்து கொரோனா பரவி வருகிறது. இதனால் ஐந்தாம் கட்ட ஊரடங்கில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு பொதுப்போக்குவரத்து உள்ளிட்ட தளர்வுகள் வழங்கப்படவில்லை.

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

வாட்ஸ்ஆப் இல் தகவல்களைப் பெறஇங்கே கிளிக்செய்யவும்

சென்னையில் தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு வருகிறது. இதனால் அங்கு தடுப்புப் பணிகளை தீவிரப்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. ஏற்கனவே கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் இருந்து இரண்டு முறை ஒருவர் வெளியே சென்றால் அவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவர் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்து இருந்தார்.

சலூன் கடைக்காரர்கள், சலவைத் தொழிலாளர்கள் & டெய்லர்களுக்கு ரூ. 10,000 – மாநில அரசு அறிவிப்பு..!

இந்நிலையில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் ஆகிய நகரங்களில் இருந்து வெளியூர் செல்வதற்காக வழங்கப்படும் இ-பாஸ் இனிமேல் வழங்கப்படாது என அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இ-பாஸ் இல்லாமல் மற்ற நகரங்களுக்கு செல்வது தடை செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here