மாநில இளைஞர் விருதுக்கான தொகை ரூபாய் 1,00,000 ஆக உயர்வு – தமிழக அரசு அறிவிப்பு!!

0

தமிழகத்தில் சிறந்த சேவை புரிந்த இளைஞர்களுக்கு வழங்கப்பட்டு வந்த பரிசுத் தொகை ரூபாய் 50,000 லிருந்து 1,00,000 என உயர்த்தி வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பரிசுத் தொகை உயர்வு:

தமிழகத்தில் சில நாட்களுக்கு முன் தொடங்கிய சட்டமன்ற கூட்டத்தொடர் முக்கிய அறிவிப்புகள் மற்றும் துறை சார்ந்த  திட்டங்களுடன் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.  இந்த நிலையில், நேற்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின்  மூலம் முதல்வர் முன்னிலையில் நீட் தேர்வுக்கு எதிராக புதிய சட்டம் இயற்றப்பட்டு குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது.  மேலும், தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசு பணியில் முன்னுரிமை வழங்கப்படும் என்ற அறிவிப்பு வெளியானது.

இந்த நிலையில், இன்று சட்டப்பேரவையில் வனத்துறை, பருவநிலை மாற்றம் மற்றும் இளைஞர் நலன் மேம்பாட்டு சார்ந்த துறைகள் மீதான விவாதங்கள் நடைபெற்றது. இதில் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் தங்கள் பதிலை முன் வைத்தார்கள்.  இதில்,  இளைஞர் நலன் மேம்பாட்டு துறை சார்ந்த விருதுகள் குறித்த  முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.

அதாவது, மாநிலத்தில் சமுதாய வளர்ச்சிக்கு சேவையாற்றும் 15வயது முதல் 35 வயது வரை உள்ள, மூன்று ஆண்கள் மற்றும் மூன்று பெண்கள் என 6 இளைஞர்களுக்கு முதலமைச்சரின் கையால் சிறந்த இளைஞருக்கான விருதும் இதோடு சேர்த்து 50,000 ரூபாய் ரொக்கமும் சுதந்திர தினத்தன்று வழங்கப்படும்.  தற்போது இந்த விருதுக்கான தொகை, ரூபாய்  50,000 லிருந்து 1,00,000 ஆக உயர்த்தப்படுவதாக மாநில இளைஞர் நலன் மேம்பாட்டு துறையின் கொள்கை விளக்க குறிப்பின் வாயிலாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here