அமேசான் நிறுவனம் இந்தியர்களுக்கு கொடுத்த அரிய வாய்ப்பு – நிறுவனம் அறிவித்த புதிய திட்டம்!!

0

பிரபல பன்னாட்டு நிறுவனமான அமேசான் இந்தியாவில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை அறிவித்துள்ளது. அதாவது அந்நிறுவனம் 35 நகரங்களில் உள்ள  8,000 க்கும் மேற்பட்ட இளைஞர்களை நேரடியாக பணியமர்த்த திட்டமிட்டுள்ளது. மேலும் வரும் செப் 16 ஆம் தேதி முதல் இதற்கான வேலைவாய்ப்பு முகாமை நடத்த திட்டமிட்டுள்ளது.

அமேசானின் புதிய திட்டம்:

பிரபல ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனமான அமேசான் புதிய ஆஃபர்களை வெளியிட்டு மக்கள் அனைவரையும் கவர்ந்து வருகிறது. வீட்டிலிருந்தே பொருட்களை வாங்கி கொள்ளவதால் வாடிக்கையாளர்களின் நேரமும் அலைச்சலும் மிச்சமாவதுடன் நிறுவனம் கொடுக்கும் ஆஃபர்களினால் பணமும் சேமிக்கப்படுகிறது.

தற்போது இதனை உபயோகிக்கும் மக்களின் எண்னிக்கையானது நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே தான் வருகிறது. இந்நிலையில் இந்த ஆண்டு இந்தியாவின் 35 நகரங்களில் 8,000 க்கும் மேற்பட்டவர்களை நேரடி பணியாளர்களாகளை நியமிக்க திட்டமிட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு முகாம்களை செப்டம்பர் 16 ஆம் தேதி அமேசான் நடத்தவுள்ளது.

இது குறித்து அமேசான் நிறுவனமானது 2025க்குள் நேரடியாகவும் மறைமுகமாகவும் 20 லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்குவதை இலக்காகக் கொண்டுள்ளதாகவும், ஏற்கனவே இந்தியாவில் 10 லட்சம் நேரடி மற்றும் மறைமுக வேலைகளை உருவாக்கியுள்ளதாகவும் கூறியுள்ளது. கொரோனா தொற்றுநோய் நெருக்கடி காலத்தில் கூட அமேசான் நிறுவனமானது நேரடியாகவும் மறைமுகமாகவும் 3 லட்சம் பேருக்கு வேலை வழங்கியது குறிப்பிடத்தக்கது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here