கொரோனா தடுப்பு & வளர்ச்சி பணிகள் ஆய்வு – 3 மாவட்டங்களுக்கு ‘முதல்வர் விசிட்’!!

0

கொரோனா தடுப்பு மற்றும் மாவட்ட வளர்ச்சி பணிகள் குறித்து பார்வையிட தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் டிசம்பர் 16 மற்றும் 17 தேதிகளில் கரூர், அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் ஆய்வு நடத்தவுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பு பணி மற்றும் நடவடிக்கைகள்:

தமிழகத்தில் காரோண நோய் தோற்று குறைந்து வரும் நிலையில் தற்போது டிசம்பர் 31 வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. போக்குவரத்து தளர்வுகளை நிக்கி 100 சதவீத இருக்கைகளுடன் பயணம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கல்லூரிகள் இறுதியாண்டு மாணவர்களுக்கு டிசம்பர் 7-ம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கப்பட்ட நிலையில் அரசு விதித்த கட்டுப்பாடுகள் முறைப்படி நடக்கிறதா என்பதை பார்வையிடவும், மாவட்ட வளர்ச்சி பணிகள் குறித்தும் பார்வையிட தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வருகிற டிசம்பர் 16 மற்றும் 17 தேதிகளில் கரூர், அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் ஆய்வு நடத்தவுள்ளார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

cmo of tamilnadu
cmo of tamilnadu

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 2 நாட்கள் சிறப்பு முகாம்!!

டிசம்பர் 4 அன்று சிவகங்கை மாவட்டத்தில் ஆய்வு நடத்திய பின் நிவர் மற்றும் புரவி புயல் காரணமாக கொரோனா தடுப்பு பணி மற்றும் மாவட்ட வளர்ச்சி பணிகள் ஒத்திவைக்கப்பட்டது. அதன் பின் வெல்ல நிவாரண பணிகளை பார்வையிட்ட முதலமைச்சர் இது வரை 20-க்கு மேற்பட்ட மாவட்டங்களை பார்வையிட்டுள்ளார். அதன்பின் தற்போது இந்த 3 மாவட்டங்களில் கொரோனா தடுப்பு பணி மற்றும் மாவட்ட வளர்ச்சி பணி குறித்து அந்த அந்த மாவட்ட ஆட்சியர் மற்றும் சுகாதார குழுவுடன் ஆலோசனை மேற்கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here