வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 2 நாட்கள் சிறப்பு முகாம் – தேர்தல் ஆணையம் அறிவிப்பு!!

0

2021ம் ஆண்டு நடக்கவிருக்கும் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலில் வாக்காளர் சேர்ப்பு முகாம் தமிழகத்தில் இன்றும் (டிச., 12) நாளையும் (டிச., 13) நடைபெறுகிறது. 18 வயது பூர்த்தியடைந்தவர்கள் தங்களது பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்த்துக் கொள்ளலாம்.

வாக்காளர் பட்டியல்

அனைத்து சட்டசபை தொகுதிகளுக்கும், வரைவு வாக்காளர் பட்டியல் தமிழக அரசு வெளியிட்டது. வாக்காளர்கள் வசதிக்காக, கடந்த மாதம், 21, 22ம் தேதிகளில், தமிழகத்தில் உள்ள அனைத்து ஓட்டுச் சாவடிகளிலும், வாக்காளர் சிறப்பு முகாம் நடந்தது. அங்கு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், திருத்துதல், முகவரி மாற்றம், பிறந்த தேதி மற்றம் வயது மாற்றம் உள்ளிட்டமாற்றங்கள் செய்ய விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வந்தன. இந்நிலையில் வாக்காளர் பட்டியல் திருத்தும் பணி வரும், 15ம் தேதி வரை சிறப்பு முகாம் நடைபெறுகிறது. கடந்த மாதம் விண்ணப்பிக்க தவறியவர்கள் இந்த மாதம் விண்ணப்பிக்கலாம்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

கடந்த மாதம் நடந்த வாக்காளர் திருத்த முகாமில், நவம்பர் 21ம் தேதி 5.43 லட்சம் விண்ணப்பங்கள் 22ம் தேதி நடந்த முகாமில், 8.03 லட்சம் விண்ணப்பங்கள் வந்தன. இதில், 21ம் தேதி 4.38 லட்சம் விண்ணப்பங்களும் 22ம் தேதி 6.14 லட்சம் விண்ணப்பங்களும் பெயர் சேர்க்க கோரி வந்தன.

அரசு ஊழியர்கள் ஜீன்ஸ், டிஷர்ட் அணியக்கூடாது!!

தமிழகத்தில் உள்ள அனைத்து ஓட்டுச் சாவடிகளிலும், இன்றும், நாளையும், வாக்காளர் சிறப்பு முகாம் நடக்கிறது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய, முகவரி மாற்றம் செய்துகொள்ளுங்கள். மேலும், இந்த பணிகள் 15ம் தேதியுடன் நிறைவடைகிறது. முகாமிற்கு சென்று திருத்தும் செய்ய முடியாதவர்கள், www.nvsp.in, https://voterportal.eci.gov.in என்ற இணையதளங்களிலும், ‘VOTER HELP LINE’ என்ற மொபைல் ஆப் வழியாகவும் விண்ணப்பித்து திருத்தங்களை மேற்கொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here