Thursday, April 25, 2024

பயிற்சியின் போது பற்றியெரிந்த ரேஸ் கார் – நூலிழையில் உயிர் தப்பிய ரேசர்!!

Must Read

துபாயில் உள்ள அபுதாபியில் ரேஸ் பயிற்சி மேற்கொள்ளப்பட்டது. அப்போது ரேஸ் காரினை ஒட்டி சென்ற கிமி ராய்க்கோன் காரில் நெருப்பு பற்றிக்கொண்டதால் நூல் இலையில் உயிர் தப்பினார். இதனால் அனைவரும் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.

ரேஸ் கார் பயிற்சி:

துபாயில் உள்ள அபுதாபியில் ஃபார்முலா 1 கார் பந்தயத்திற்கு தயாராகும் வகையில் ரேஸ் கார் ஓட்டும் வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டனர். அதில் 41 வயதான பார்முலா 1 வீரரான “தி ஐஸ் மேன்” என்று செல்லமாக அளிக்கப்படும் கிமி ராய்க்கோன் பங்கேற்றார். நேற்று இரண்டாம் கட்ட பயிற்சி நடைபெற்றது. அப்போது யாரும் எதிர்பாரா விதமாக ரேசர் கிமி ராய்க்கோன் கார் தீப்பிடித்து எரிய ஆரம்பித்து விட்டது. இதனால் அனைவரும் ஒரு நிமிடம் பதட்டமடைந்து, தீயினை அணைக்க விரைந்தனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

கிமி ராய்க்கோன் ஒட்டி சென்ற காரின் பொறியாளரான ஆல்பா ரோமியோ கிமிக்கு உடனடியாக தீப்பற்றியுள்ளதை தெரியப்படுத்தினார். இதனை அடுத்து, சுதாரித்து கொண்ட கிமி காரை விட்டு வெளியே வந்து விட்டார். காரை ஓரமாகவும் நிறுத்தி விட்டார். இதனை அடுத்து அந்த இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் காரில் பற்றிருந்த தீயினை அணைத்தனர்.

கொரோனா தடுப்பூசி செலுத்தினால் 2 மாதங்களுக்கு மது அருந்தக் கூடாது!!

kimi rainkkonen
kimi rainkkonen

பிறகு, இது குறித்து கிமி கூறியதாவது, “காரில் திடீர் என்று தீப்பற்றியது எதிர்பாரா ஒன்று தான். இது ஒரு வெட்க கேடான விஷயம் தான். சிறிய குழப்பம் இருந்ததால் நாங்கள் அனைவரும் இணைந்து தீயினை அணைத்தோம். அடுத்த பயிற்சியின் போது காரில் என்ஜின் பாக்ஸ் மற்றும் கியர் பாக்ஸை மற்ற வேண்டிய சூழல் ஏற்படலாம். பொறியாளர்களுக்கு இது கொஞ்சம் சிரமமான வேலை தான்” இவ்வாறாக தெரிவித்துள்ளார்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

TNPSC குரூப் 2, 2A தேர்வுக்கான மாஸ் அப்டேட்., இந்த தேதியில் தான் பிரிலிம்ஸ்? அரிய வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!!!

TNPSC குரூப் 2, 2A தேர்வுக்கான மாஸ் அப்டேட்., இந்த தேதியில் தான் பிரிலிம்ஸ்? அரிய வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!!! தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (TNPSC) பல்வேறு...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -