என்னென்ன அறிவிப்புகள்?? எவ்வளவு ஒதுக்கீடு?? – தமிழக பட்ஜெட் 2020..!

0

தமிழ்நாடு சட்டப்பேரவையின் 2020-21ம் நிதி ஆண்டிற்கான மாநில பட்ஜெட்டை இன்று துணை முதல்வரும், நிதியமைச்சரும் ஆன பன்னீர் செல்வம் இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். முதலமைச்சர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் முன்னிலையில் அதிமுக ஆட்சியின் கடைசி பட்ஜெட் (2021 தேர்தலுக்கு முன்) இன்று தாக்கல் செய்யப்பட்டது.

துறை வாரியாக எவ்வளவு ஒதுக்கீடு..?

தமிழக 2020-21 பட்ஜெட்டில் அதிகபட்சமாக கல்வித்துறைக்கு ரூ.34,181.73 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. துறை வாரியாக ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ள நிதிநிலை விபரம்,

Image result for whatsapp logo

வாட்ஸ்ஆப் இல் தகவல்களைப் பெறஇங்கே கிளிக்செய்யவும்

  • உயர்கல்வித்துறை -ரூ.5,052,84 கோடி
  • மின்சார துறை- ரூ. 20,115.58 கோடி
  • மருத்துவ கல்லூரி நிறுவ -1200 கோடி
  • சுகாதாரத்துறை – ரூ.15,863 கோடி
  • தமிழ் வளர்ச்சி துறை -ரூ.74.08 கோடி
  • தொல்லியல் துறை – ரூ.31.93 கோடி
  • போக்குவரத்து துறை- ரூ.2716..26
  • பேரிடர் மேலாண்மை -1360 கோடி
  • சிறைசாலைததுறை- 392 கோடி
  • எரிசக்தி துறை – 20,115.58 கோடி
  • கீழடி அகல் வைப்பகம் அமைக்க- ரூ.12.21 கோடி
  • அம்மா உணவக திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த -100 கோடி
  • நெடுஞ்சாலை துறை- ரூ.15,850 கோடி
  • ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ. 5306.95 கோடி
  • பயிர்க்கடன் – ரூ.11 ஆயிரம் கோடி
  • கால்நடை வளர்ப்பு-ரூ.199 கோடி
  • வேளாண்மை துறை -11,894 கோடி
  • அம்ரூத் திட்டம் ரூ.1450 கோடி
  • நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை – ரூ. 18,540 கோடி
  • நிர்பயா திட்டம் -ரூ.71 கோடி
  • உணவு மானியம் – ரூ.6,500 கோடி
Image result for telegram logo

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

மேலும் தமிழக அரசு சார்பில் அரசுப் பேருந்துகளில் சிசிடிவி கேமரா பொருத்துதல் போன்ற பல புதிய திட்டங்களும் அறிவிக்கப்பட்டு உள்ளன.

  • ஏழைக்குடும்பங்களுக்கு எல்.ஐ.சி.,யுடன் இணைந்து, அம்மா விபத்து மற்றும் ஆயுள் காப்பீடு திட்டம் செயல்படுத்தபட உள்ளது. இதன்மூலம், இயற்கை மரணம் அமைந்தவர்களுக்கான இழப்பீடு ரூ.2 லட்சமாக உயர்த்தப்படும்.
  • விபத்தில் நிரந்தர ஊனம் ஏற்பட்டால் ரூ.2லட்சம் வரை இழப்பீடு; விபத்து உள்ளிட்டவற்றில் அகால மரணம் அடைவோருக்கான இழப்பீடு ரூ.4 லட்சமாக உயர்த்தப்படும்.
  • ஆழ்கடல் மீனவர்களை தொடர்புகொள்ள இஸ்ரோ கண்டறிந்த டிரான்ஸ்பாண்டர்கள் படகுகளில் பொருத்தப்படும். 4997 விசைப்படகுகளில் ரூ.18 கோடியில் இந்த தகவல்தொடர்பு டிரான்ஸ்பான்டர்கள் பொருத்தப்படும்.
  • பசுமை வீடுகளுக்கான கட்டுமானத் தொகையை ரூ. 2,10,000 கோடியாக உயர்த்தி உள்ளது. இதன் மூலம் 30 ஆயிரம் ரூபாய் கூடுதலாக கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
  • பிரதம மந்திரி வீட்டு வசதி திட்டத்தின் கீழ் 2 லட்சம் வீடுகள் கட்டித்தரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. உள்ளாட்சிகளுக்கு ரூ. 6,754 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கிராம உள்கட்டமைப்புகளின் அடிப்படை தேவைகளுக்கு ரூ. 500 கோடி ஒதுக்கீடு.
To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here