கருப்பு தினமான காதலர் தினம்..! புல்வாமா தாக்குதலில் 44 வீரர்கள் வீரமரணம் அடைந்த தினம் இன்று..!

0

உலக அளவில் பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி, இந்திய நாட்டின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கிய புல்வாமா தாக்குதல் நடந்து இன்றுடன் ஒரு ஆண்டு நிறைவடைகிறது. இந்த நாளில் நமது நாட்டிற்காக உயிர் நீத்த 44 சி.ஆர்.பி.எப் வீரர்களின் தியாகத்தை நினைவு கூர்வோம்.

78 பேருந்து 2,547 சி.ஆர்.பி.எப் வீரர்கள்..!

கடந்த வருடம் இதே நாளில் (பிப்ரவரி 14, 2019) உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாடிக் கொண்டிருந்தனர். அன்று 78 பேருந்துகளில் 2,457 சி.ஆர்.பி.எப் வீரர்கள் (மத்திய ரிசர்வ் காவல் படையினர்) ஜம்மு காஷ்மீருக்கு ஸ்ரீநகர்-ஜம்மு தேசிய நெடுஞ்சாலை வழியாக சென்று கொண்டு இருந்தனர். அன்று தீடிரென வீரர்கள் யாரும் எதிர்பாராத நேரத்தில் சுமார் 15:15 மணி அளவில் லத்திபோரா மற்றும் அவந்திபோரா பகுதிகளுக்கருகே சென்று கொண்டிருந்த போது ஒரு ஸ்கார்பியோ வாகனம் ராணுவ வாகனத்தின் மீது மோதி வெடித்து சிதறியது.

Image result for whatsapp logo

வாட்ஸ்ஆப் இல் தகவல்களைப் பெறஇங்கே கிளிக்செய்யவும்

350 கிலோ வெடிபொருள்..!

இந்த கோரத்தாக்குதலில் 44 சி.ஆர்.பி.எப் வீரர்கள் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தனர். இந்த விசாரணையில் அந்த காரினை ஒட்டி வந்தவன் அகமது தார் என்ற ககபோரா பகுதியைச் சேர்ந்த 20 வயது நபர் என்பது தெரிய வந்தது. மேலும் அந்த காரில் 350 கிலோ எடையுள்ள வெடிபொருட்கள் இருந்ததாக விசாரணையில் தெரிய வந்தது.

Image result for telegram logo

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானை சேர்ந்த பாகிஸ்தான் தீவிரவாதக் குழுவான ஜெய்ஷ்-இ-முகமது பொறுப்பேற்றுக் கொண்டது. அது தொடர்பாக வீடியோ ஒன்றையும் அவர்கள் வெளியிட்டனர். அந்த வீடியோவில் தோன்றும் அகமது தார் “ஒரு வருடத்திற்கு முன்பு, நான் ஜெய்ஷில் இணைந்தேன். நீண்ட காத்திருப்பிற்கு பின்பு இந்த தாக்குதலை நடத்தியுள்ளேன். இந்த வீடியோவை நீங்கள் காணும் போது, நான் சொர்க்கத்தில் மகிழ்ச்சியுடன் இருப்பேன்” என்று கூறினான்.

Image result for youtube logo

யூடூப் சேனலில் தகவல்களைப் பெற இங்கே கிளிக்செய்யவும்

எதிர் தாக்குதல்..!

இந்த தாக்குதலில் தமிழகத்தைச் சேர்ந்த தூத்துக்குடி மாவட்டம் சவலாப்பேரியைச் சேர்ந்த சுப்பிரமணியன் மற்றும் அரியலூர் மாவட்டம், கார்குடியைச் சேர்ந்த சிவசந்திரன் ஆகிய வீரர்களும் உயிர் நீர்த்தனர். இதற்கு பதிலடியாக பாகிஸ்தான் பாலகோட் பகுதியில் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் முகாம்களின் மீது துல்லியத் தாக்குதல் நடத்தியது இந்திய ராணுவம்.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here