56 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற தமிழ்நாடு…, 55 பந்தில் 4 பவுண்டரி 5 சிக்ஸர் என அசத்திய கேப்டன்!!

0
56 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற தமிழ்நாடு..., 55 பந்தில் 4 பவுண்டரி 5 சிக்ஸர் என அசத்திய கேப்டன்!!
56 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற தமிழ்நாடு..., 55 பந்தில் 4 பவுண்டரி 5 சிக்ஸர் என அசத்திய கேப்டன்!!

சையத் முஷ்டாக் அலி டிராபியின் 100 வது போட்டியில் சண்டிகர் அணியை எதிர்கொண்ட தமிழ்நாடு அணி 56 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

தமிழ்நாடு vs சண்டிகர்:

இந்தியாவின் உள்ளூர் போட்டிகளில் ஒன்றான சையத் முஷ்டாக் அலி டிராபி கடந்த 11ம் தேதி முதல் 38 அணிகளுக்கு இடையே விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில், குரூப் “இ” யில் இடம் பெற்றுள்ள தமிழ்நாடு அணி ஒடிசா, சிக்கிம் மற்றும் ஜார்கண்ட் அணியை வீழ்த்தி முன்னிலை பெற்றுள்ளது. இந்நிலையில், சண்டிகர் அணிக்கு எதிராக தமிழ்நாடு அணி இன்று மோதியது.

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

இந்த போட்டியில், டாஸ் வென்ற சண்டிகர் அணி பௌலிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய தமிழ்நாடு அணியின் அஜிதேஷ் ஒரு ரன்னில் வெளியேறி அதிர்ச்சியை தந்தார். இதனால், பொறுப்புடன் விளையாடிய, கேப்டன் பாபா அபராஜித் மற்றும் ஹரி நிஷாந்த் ஜோடி 2 வது விக்கெட்டுக்கு 45 ரன்கள் சேர்ந்தனர். இதில், ஹரி நிஷாந்த் 26 ரன்னில் வெளியேற, அடுத்து வந்த வீரர்களும் நிலை இல்லாமல் பெவிலியன் திரும்பினர். இதனால், தமிழ்நாடு அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 161 ரன்கள் எடுத்திருந்தனர்.

7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்ந்த நமீபியா…, 4 புள்ளிகளுடன் சூப்பர் 12 ல் நுழைந்த நெதர்லாந்து & இலங்கை!!

இதில், பாபா அபராஜித் 55 பந்தில் 4 பவுண்டரி 5 சிக்ஸர் உட்பட 67 ரன்கள் அடித்திருந்தார். இதையடுத்து, 162 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சண்டிகர், ஆரம்பம் முதலே தமிழ்நாடு பவுலர்களை எதிர்க்க கொள்ள தடுமாறி வந்தனர். இதன் விளைவால், 105 ரன்களுக்குள் சுருண்ட சண்டிகர், 56 ரன்கள் வித்தியாசத்தில் தமிழ்நாடு அணியிடம் தோல்வியை தழுவியது. இதில் தமிழ்நாடு சார்பாக, வருண் சக்கரவர்த்தி( 3), நடராஜன் மற்றும் சந்தீப் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here