தீபாவளி அன்று பட்டாசு வெடிக்க தடை.,, உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!

0

ஜனவரி 1, 2023 வரை டெல்லியில் பட்டாசு வெடிக்க விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் விசாரிக்க மறுத்துவிட்டது.

பட்டாசு வெடிக்க தடை:

நாடு முழுவதும் வரும் 24ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டப்பட உள்ளது. மேலும் ஒவ்வொரு ஆண்டும் தலைநகர் டெல்லியில் காற்று மாசடைவதை கட்டுப்படுத்தும் விதமாக தீபாவளி அன்று பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் அடுத்த ஆண்டு ஜனவரி 1ம் தேதி வரை டெல்லியில் பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதாவது மாநிலத்தில் தீபாவளிக்கு பட்டாசுகளை வாங்கினால், வெடித்தால், ரூ.200 அபராதம்,6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும் மற்றும் பட்டாசுகளை தயாரித்தல், விற்றால், ரூ.5,000 வரை அபராதம், 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்ந்த நமீபியா…, 4 புள்ளிகளுடன் சூப்பர் 12 ல் நுழைந்த நெதர்லாந்து & இலங்கை!!

ஜனவரி 1, 2023 வரை பட்டாசு விற்பனை மற்றும் பயன்பாட்டுக்கு தடை விதிக்கும் டெல்லி மாசுக்கட்டுப்பாட்டு குழுவின் முடிவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இதனை டெல்லி உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

இந்த விவகாரம் முன்பு நீதிமன்றத்தால் பலமுறை பரிசீலிக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டு உள்ளது. இதனால், இந்த மனுவை விசாரிப்பது சரியல்ல, பட்டாசு வாங்க செலவிடும் பணத்தை இனிப்புகள் வாங்குவது போன்ற பல வழிகளில் செலவிடுங்கள், மக்கள் சுத்தமான காற்றை சுவாசிக்கட்டும் என்று நீதிமன்றம் கூறியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here