ரஞ்சி டிராபி தமிழ்நாடு vs டெல்லி: இலக்கை அடையாமலேயே டிராவில் முடிந்த ஆட்டம்!!

0
ரஞ்சி டிராபி தமிழ்நாடு vs டெல்லி: இலக்கை அடையாமலேயே டிராவில் முடிந்த ஆட்டம்!!
ரஞ்சி டிராபி தமிழ்நாடு vs டெல்லி: இலக்கை அடையாமலேயே டிராவில் முடிந்த ஆட்டம்!!

இந்தியாவில் நடைபெற்று வரும் ரஞ்சி டிராபியில், டெல்லி மற்றும் தமிழ் நாடு அணிகளுக்கு இடையிலான போட்டி டிரா ஆனதாக அறிவிக்கப்பட்டது.

ரஞ்சி டிராபி:

இந்தியாவில் ரஞ்சி டிராபி தொடரானது, கடந்த 13ம் தேதி முதல் 38 அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. இந்த தொடரில், தமிழ்நாடு அணியானது, டெல்லி அணியை எதிர்த்து போட்டியிட்டது. 27ம் தேதி முதல் நடைபெற்ற இந்த டெஸ்டில், டெல்லி அணி தனது முதல் இன்னிங்ஸில் 303 ரன்களை எடுத்திருந்தது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்த இலக்கை துரத்திய தமிழ் நாடு அணி, பிரதோஷ் ரஞ்சன் பால்(124) மற்றும் பாபா இந்திரஜித்(71) அதிரடியால், நிர்ணயித்த இலக்கை விட, 124 ரன்கள் கூடுதலாக (427) எடுத்தது. இதன் பின், தனது 2வது இன்னிங்ஸை தொடங்கிய டெல்லி அணி, 262 ரன்களில் ஆல் அவுட்டானது.

ரிஷப்புக்காக பிராத்திக்கும் பாகிஸ்தான் வீரர் & பாலிவுட் நடிகை!!

இதனால், 139 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தமிழ்நாடு அணி களமிறங்கியது. சாய் சுதர்சன் (24), ஜெகதீசன் (18), பாபா இந்திரஜித் (0) என வெளியேற, 6 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 54 ரன்கள் எடுத்திருந்தது. இதன் பின், வெளிச்சமின்மை காரணமாக ஆட்டம் நிறுத்தப்பட்டது. இதையடுத்து, தமிழ்நாடு, டெல்லி அணிகளுக்கு இடையிலான இந்த டெஸ்ட் போட்டியானது, டிரா செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதில், தமிழ்நாடு அணி முதல் இன்னிங்ஸில் அதிக ரன்கள் எடுத்தால், 3 புள்ளிகளும், டெல்லி அணிக்கு ஒரு புள்ளியும் வழங்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here