இந்தியாவில் கடத்தல் தங்கம் பறிமுதலில் தமிழ்நாடு 2ம் இடம்., ஒன்றிய அரசு வெளியிட்டுள்ள பட்டியல்!!!

0
இந்தியாவில் கடத்தல் தங்கம் பறிமுதலில் தமிழ்நாடு 2ம் இடம்., ஒன்றிய அரசு வெளியிட்டுள்ள பட்டியல்!!!
இந்தியாவில் கடத்தல் தங்கம் பறிமுதலில் தமிழ்நாடு 2ம் இடம்., ஒன்றிய அரசு வெளியிட்டுள்ள பட்டியல்!!!

இந்தியாவில் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அசுர வேகத்தில் உயர்ந்து வருகிறது. ஆனாலும் மக்களிடையே தங்கத்தின் மீதான மோகம் குறைந்த பாடில்லை. இதனால் தங்கம் குறைந்த விலையில் விற்பனை செய்யும் நாடுகளான துபாய், சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு கடத்தி வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

எனவே இதுபோன்ற தங்கம் கடத்தலை தடுக்க புலனாய்வு துறை மூலம் ரகசியமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடத்தல்காரர்கள் அவ்வப்போது விமான நிலையத்திலோ, ரயில் நிலையத்திலோ பிடிபட்டு வருகின்றனர். இப்படியாக கடந்த 3 ஆண்டுகளில் மாநிலங்களில் பதிவாகியுள்ள தங்க கடத்தல் விவரங்களை ஒன்றிய அமைச்சர் பங்கஜ் சவுத்ரி வெளியிட்டுள்ளார்.

மார்ச் 16 முதல் 26 ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை.., அரசு வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!!

இதில் நாடு முழுவதும் 8,956 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். இந்த பட்டியலில் தமிழ்நாடு 2ம் இடத்தில் உள்ளதாக தெரிவித்துள்ளார். அதாவது கடந்த 3 ஆண்டுகளில் சுமார் 2,237 வழக்குகள் தொடரப்பட்டு 1,317 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். மேலும் முதலிடமாக கேரள மாநிலத்தில் 1869.29 கிலோ தங்கம் பறிமுதல் செய்துள்ளதாகவும், மராட்டியத்தில் 1,125 கிலோ பறிமுதல் செய்யப்பட்டு 3ம் இடத்தில் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here