மார்ச் 16 முதல் 26 ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை.., அரசு வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!!

0
மார்ச் 16 முதல் 26 ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை.., அரசு வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!!
மார்ச் 16 முதல் 26 ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை.., அரசு வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!!

மாநிலத்தில் வீரியமெடுக்கும் வைரஸ் காய்ச்சலால் பள்ளிகளுக்கு 16 தேதி முதல் 26 ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி மாநிலம்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10, 11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதை தொடர்ந்து 1 முதல் 9 ஆம் வகுப்புகளுக்கான தேர்வுகள் தொடங்க உள்ளதால் மாணவர்கள் அதற்காக தயாராகி வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்த நேரத்தில் தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கொரோனா, ஒமிக்ரானை தொடர்ந்து தற்போது புது வகை இன்புளுயன்சா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

பிளஸ்-1 பொதுத்தேர்வு.., 12660 மாணவர்கள் கலந்து கொள்ளவில்லை.., கல்வித்துறை தகவல்!!!

மேலும் மாணவர்களின் நலன் கருதி புதுச்சேரி மாநில அமைச்சர் நமச்சிவாயம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது பரவி வரும் வைரஸ் காய்ச்சலால் மாணவர்களுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படாத வகையில் நாளை முதல் வரும் 26 ஆம் தேதி வரை 1-8ம் வகுப்பு பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here