எது இலவச பேருந்துனு குழப்பமா இருக்கா?? போக்குவரத்துறையின் அசத்தல் ஐடியா!!!

0
தமிழக அரசு பேருந்துகளுக்கு புதிய நெறிமுறைகள் - ஓட்டுநர், நடத்துனருக்கு அதிரடி கட்டுப்பாடுகள்!!
மகளிருக்கான இலவச பேருந்தை அடையாளம் காண்பதில் குழப்பம் நிலவுவதால், மகளிரின் இலவச பயணத்துக்கான சாதாரண அரசு பேருந்துகளுக்கு தனி நிறம் பூச போக்குவரத்துத்துறை அதிகாரிகள் தற்போது ஆலோசித்து வருகின்றனர்.

 

ENEWZ  WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தமிழகத்தில் இலவசமாக உள்ளூர் பேருந்துகளில் அதாவது டவுன் பஸ்களில் மகளிருக்கு கட்டணமில்லா பயண வசதி அளிக்கப்படும் என்று திமுக தேர்தலில் வாக்குறுதி அளித்திருந்தது. அதன்படி, தமிழக முதல்வராக பொறுப்பேற்றுக்கொண்ட திமுக தலைவர் ஸ்டாலின் இலவச பேருந்துக்கான கோப்பில் கையெழுத்திட்டார். 

இதைத்தொடர்ந்து சாதாரண கட்டண பேருந்துகளில் மகளிர் இலவசமாக பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். ஆனால் சாதாரண கட்டண பேருந்துகளை மகளிரால் அடையாளம் காண முடியாததால் மற்ற பேருந்துகளில் மாறி  ஏறி விடுகின்றனர்.இந்த குழப்பத்தை தவிர்க்க சாதாரண கட்டண பேருந்துகளை மகளிர் எளிதாக அடையாளம் காண அந்த பேருந்துகளுக்கு தனி நிறம் பூசலாம் என அதிகாரிகள் கூட்டத்தில் கூறப்பட்டுள்ளது.
மேலும் இந்த திட்டத்திற்கு மாற்றாக அதாவது பேருந்து முழுவதும் தனி நிறம் பூசுவதற்கு பதிலாக பேருந்தின் நடுவில் மட்டும் பட்டையாக இளஞ்சிவப்பு வண்ணத்தில் ஸ்டிக்கர் ஒட்டலாம் என்றும் யோசனைகளை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் உத்தரவிட்ட பின்னர் இத்திட்டங்களை செயல்படுத்துவதற்கான பணிகள் துவங்கும்.இந்த திட்டங்களுக்கான மாதிரி படங்கள் அவருக்கு அனுப்பப்பட்டுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here