Monday, May 6, 2024

new born babies death ratio in india

இந்தியாவில் ஒரே மாதத்தில் 491 பிஞ்சு குழந்தைகள் பலி – தொடரும் சோகம்

ராஜஸ்தான் மாநில மருத்துவமனையில் 272 பிறந்த குழந்தைகள், குஜராத் மாநில மருத்துவமனையில் 219 பிறந்த குழந்தைகள் கடந்த ஒரு மாதத்தில் உயிர் இழந்திருப்பது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தானில் நடந்த சோகம்,      கடந்த டிசம்பர் மாதத்தில் மட்டும் ராஜஸ்தானில் பிகானீரிலுள்ள சர்தார் படேல் அரசு மருத்துவமனையில் புதிதாக பிறந்த 162 பிஞ்சுக் குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். கோட்டா நகரிலுள்ள ஜே.கே.லான் அரசு மருத்துவமனையில் 110 பிறந்த குழந்தைகள் கடந்த மாதத்தில் பலியாயினர். குஜராத்திலும், கடந்த ஒரே மாதத்தில், குஜராத் மாநிலம் ராஜ்கோட்டிலுள்ள அரசு மருத்துவமனையில் 134 பிறந்த குழந்தைகளும், அகமதாபாத்திலுள்ள அரசு மருத்துவமனையில் 85 பிறந்த குழந்தைகளும் உயிரிழந்துள்ளனர். மாறிமாறி குற்றச்சாட்டு: இது குறித்து ராஜஸ்தானை ஆளும் காங்கிரஸ் கட்சியின் முதல்வரான அசோக் கெலாட், 'குழந்தைகள் இறப்பு ஒரு முக்கிய பிரச்னை. இதனை அரசியலாக்கக்கூடாது. ஒரு குழந்தை கூட சிகிச்சையின்போது உயிரிழக்கக்கூடாது என்பதில் அரசும், மருத்துவமனை நிர்வாகமும் கூடுதல் கவனம் மேற்கொள்ள வேண்டியது கடமையாகும்' என்றார். இது குறித்த கேள்விக்கு, குஜராத்தை ஆளும் பா.ஜ., முதல்வர் விஜய் ரூபானி செய்தியாளர்களுக்கு பதிலளிக்காமல் சென்றுவிட்டார். இந்நிலையில் இவ்விரு கட்சியினரும் மாறிமாறி குற்றச்ச்சாட்டுகளை தெரிவித்து வருவகின்றனர்.
- Advertisement -spot_img

Latest News

PF சந்தாதாரர்களுக்கு ஜாக்பாட்., ரூ.50,000 வரையிலும் போனஸ் கிடைக்கும்? EPFO-வின் மாஸ் விதிகள்!!!

அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் ஊழியர்களின் ஓய்வூதிய கால நலன் கருதி, மாதாந்திர ஊதியத்தில் PF தொகை பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு பிடித்தம்...
- Advertisement -spot_img